Ad

சனி, 1 மே, 2021

நெல்லை: கொரோனா பாசிட்டிவா! நெகட்டிவா! - வேட்பாளரை பதற வைத்த கொரோனா ரிசல்ட் !

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் செல்பவர்கள் இரு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், அல்லது கொரோனா பரிசோதனைச் சான்று காட்ட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

ஜெரால்ட்

அதனால் வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்லும் அதிகாரிகள், முகவர்கள், பணியாளர்கள் செய்தியாளர்கள் எனப் பலரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்கள். அதில் பலருக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததால் அவர்களால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்குச் செல்ல முடியவில்லை,

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் சுயேச்சைகள் எனப் பலருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் சில சுயேச்சை வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் முகவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்களால் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்துக்குச் செல்ல முடியவில்லை.

மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு

கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்த வேட்பாளர்களின் முகவர்களுக்குப் பதிலாக புதிய முகவர்களுக்கான அனுமதி பெற்று அவர்களை உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. சில சுயேச்சை வேட்பாளர்களுக்கு முகவர்களே இல்லாத நிலையும் உருவானது.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளரான கே.ஜே.சி ஜெரால்ட் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையம்

தனக்கு கொரோனா இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் தனியார் பரிசோதனை மையத்துக்குச் சென்று மறுபரிசோதனை செய்தார். அதில் கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. அதனால் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் பேசி மீண்டும் பரிசோதித்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. அதனால் நிம்மதியடைந்த அவர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தார்.



source https://www.vikatan.com/news/general-news/admk-candidate-confused-due-to-covid-test-result

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக