சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (26). இவரது மனைவி புனிதா (24). இவர்கள் இருவரும் 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தத் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. லாரன்ஸ் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இந்த தம்பதியினர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். லாரன்ஸின் அப்பா சாந்தகுமார், 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதனால் லாரன்ஸின் அம்மா ஜெயந்தி, லாரன்ஸ் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சமையல் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
கடந்த 21-ம் தேதி ஜெயந்தி, மூச்சுவிடமுடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் லாரன்ஸ் சேர்த்திருக்கிறார். அங்கு உள்நோயாளியாக ஜெயந்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மனவேதனையில் லாரன்ஸ் இருந்து வந்திருக்கிறார். அவரை அருகில் இருந்து கவனித்து வந்திருக்கிறார்.
Also Read: சென்னை: 'சக மாணவனுடன் நட்பு? திடீர் திருமண ஏற்பாடு - கல்லூரி மாணவி தற்கொலை!'
இந்தச் சூழலில் கடந்த 24-ம் தேதி தனது தாத்தா வீட்டுக்குச் சென்ற லாரன்ஸ், மனைவியின் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து லாரன்ஸின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு சில காரணங்கள் இருக்கிறதா என்று விசாரணை நடந்து வருகிறது.
புதுமாப்பிள்ளை தற்கொலை
சென்னை வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் (31). இவர் கொரோனா சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கார்த்திக்கு திருமணமாகி 3 மாதங்களாகின்றன. அதனால் தன்னுடைய மனைவிக்கும் கொரோனா தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் கார்த்திக் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் மனவேதனையிலிருந்த கார்த்திக், மருத்துவமனையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதுகுறித்து மருத்துவமனையின் தூய்மை பணியாளர்கள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ கந்தவேலு, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
source https://www.vikatan.com/news/crime/youth-commits-suicide-in-chennai-stanley-hospital
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக