Ad

சனி, 1 மே, 2021

கேரளத்தில் சாதனையை நோக்கி எல்.டி.எஃப் கூட்டணி... காலூன்றுகிறது பா.ஜ.க?!

கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. கடந்த சில தேர்தல்களாக சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியும் மாறிமாறி ஆட்சிக்கு வந்துள்ளன. மூன்றாவது அணியான பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி கடந்த தேர்தலில் நேமம் தொகுதியில் காலூன்றியது. இந்தமுறை மூன்று அணிகளும் பலமாக களத்தில் மோதின. சபரிமலை விவகாரம், ஸ்வப்னா சுரேக்ஷின் தங்கம் கடத்தல் விவகாரம் ஆகியவை எல்.டி.எஃப் கூட்டணிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டன. உள்ளாட்சி தேர்தலில் எல்.டி.எஃப் கூட்டணி அதிக இடங்களில் வென்றது.

கேரள காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா

இதையடுத்து கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் கருத்துக்கணிப்புகள் தவிடுபொடியாகும் என காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியிருந்தார்.

இந்த நிலையில் கேரள சட்டசபை தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் கருத்துக்கணிப்புகள் கூறியபடியே எல்.டி.எஃப் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஆட்சி அமைக்க 71 சீட்டுகள் தேவையான நிலையில் காலை 10 மணி நிலவரப்படி எல்.டி.எஃப் கூட்டணி 88 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. யு.டி.எஃப் கூட்டணி 49 தொகுதிகளிலும், பா.ஜ.க 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன், நேமம் தொகுதி கும்மனம் ராஜசேகரன், திருச்சூர் தொகுதியில் சுரேஷ்கோபி ஆகியோர் முன்னிலை வகித்துவருகின்றனர்.

மெட்ரோ மேன் ஸ்ரீதரன்

இதன்மூலம் மீண்டும் ஆட்சி அமைத்து சி.பி.எம் கூட்டணியான எல்.டி.எஃப் சாதனை படைக்கும் நிலை ஏற்படுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கணக்கை தொடங்கிய பா.ஜ.க இந்தமுறை கேரளத்தில் காலூன்றும் என்று கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/in-kerala-ldf-in-lead-in-assembly-election-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக