Ad

சனி, 1 மே, 2021

முன்னிலையில் தி.மு.க... நெருங்கி வரும் அ.தி.மு.க! - காரணம் என்ன?

காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் அரசு ஊழியர்களின் ஐந்தரை லட்சம் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பொதுவாக, தபால் வாக்குகளில் தி.மு.க-வே முன்னிலையில் இருக்கும். இதற்குக் காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசு ஊழியர்களுக்கு எதிராக பல அதிரடிகளை நடத்தியதால், தொடர்ந்து தி.மு.க-வுக்கு சாதகமாகவே அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் இருப்பார்கள். ஆனால், முதல்வர் எடப்பாடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து அரசு ஊழியர்களை நெருக்கும் எந்த வேலையும் நடக்கவில்லை. ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தியதை அரசு ஊழியர்கள் வரவேற்றிருப்பதையே இந்த முன்னிலை நிலவரம் காட்டுவதாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி சுமார் 7,000 வாக்குகளில் முன்னிலை பெற்றுவிட்டதால் இனி பின்னடைவுக்கு வாய்ப்பே இல்லை. அதேபோல், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், செல்லூர் ராஜூ, எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன், கே.சி.வீரமணி போன்ற அமைச்சர்களும் தபால் வாக்குகளில் 500 முதல் ஆயிரம் வாக்குகளில் முன்னிலை பெற்றிருப்பது ஆச்சர்யமாகத்தான் பார்க்கிறார்கள். பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளான தொகுதிகளில் ஒன்றான கரூரில் செந்தில் பாலாஜியை விட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலைப் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. எனினும், அமைச்சர்களிலேயே பரிதாப்பத்துக்குரியவர் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-தான். தங்கதமிழ்ச்செல்வனை விட சுமாரான வாக்குகளில்தான் முன்னிலையில் இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 10 மணி நிலவரப்படி தி.மு.க கூட்டணி சுமார் 125 தொகுதிகளில் முன்னிலை என்றால், அ.தி.மு.க கூட்டணி சுமார் 88 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது இப்படியான க்ளோஸ் கால் ஏற்பட்டிருந்தால் அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால், எடப்பாடி, ஸ்டாலின் காலத்தில் இப்படியான முன்னிலை என்பது எதிர்பாராதது. இதற்கான காரணங்கள் குறித்துப் பார்க்கப்போனால், வன்னியர் இடஒதுக்கீடு அமல்படுத்தியதால், வடக்கில் வன்னியர் வாக்குகள் மொத்தமாக கன்சாலிடேட் ஆகியிருப்பது தெரிகிறது. அதுமட்டுமின்றி, முதல்வர் எடப்பாடி மீதோ, இந்த அ.தி.மு.க அரசு மீதோ பெருவாரியான மக்கள் எதிர்ப்பு, அதாவது ஆண்டி இன்கம்பன்சி இல்லை.

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.

10 மணியளவில் தபால் வாக்குகள் எல்லா தொகுதியிலும் முழுமையாக மொத்தமும் முடிந்து எந்திர வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்படும். அதில் முதல் சில ரவுண்டுகளில் யார் முன்னிலையில் வருகிறாரோ அது சராசரியாக கடைசி ரவுண்ட் வரை செல்லக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.



source https://www.vikatan.com/news/politics/admk-in-close-call-with-dmk-early-what-is-the-reason-behind-this

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக