Ad

புதன், 5 மே, 2021

நீண்ட ஆயுள் அருளும் துளசி வழிபாடு... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

இன்றைய பஞ்சாங்கம்

6. 5. 21 சித்திரை 23 வியாழக்கிழமை

திதி: தசமி மாலை 6.17 வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம்: சதயம் பகல் 2.25 வரை பிறகு பூரட்டாதி

யோகம்: மரணயோகம் பகல் 2.25 வரை பிறகு சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை

எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை

நல்லநேரம்: காலை 12.30 முதல் 1.30 வரை

சாயிபாபா

சந்திராஷ்டமம்: பூசம் பகல் 2.25 வரை பிறகு ஆயில்யம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

வழிபடவேண்டிய தெய்வம்: ஷிர்டி சாய்பாபா

நீண்ட ஆயுள் பெற துளசி வழிபாடு உதவுமா?

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளுமே அனைவருக்கும் தேவையான ஒன்று. மோசமான நோய்த் தொற்றுக்காலத்தில் நாம் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழ்நிலையும் உருவாகிறது. அதனால் உருவாகும் அச்சமே பெரும் நோயாக மாறுகிறது. இந்த நிலை மாற நமக்கு ஆன்மிகம் பெரும் அளவில் உதவி செய்யும். குறிப்பாக வீட்டில் துளசி வைத்து வழிபாடு செய்வது ஆயுளை அதிகரிக்கும் வழிபாடு என்று சொல்கிறார்க்ள். துளசி வழிபாடு குறித்து நம் முன்னோர்கள் சில வரைமுறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். எப்படி துளசி வழிபாடு செய்வது என்பது குறித்த அந்த வழிமுறைகளை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

இன்றைய விரிவான பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். ஆனாலும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். - டேக் கேர் ப்ளீஸ்

ரிஷபம் :

ஆதாயம் : நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும் நாள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். - நண்பேன்டா

மிதுனம்

சாதகம் : முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத நன்மைகளும் பணவரவும் ஏற்படும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நன்மைகள் நடைபெறும் நல்ல நாள். - சாதகமான ஜாதகம் இன்று

கடகம்

சிந்தனை : மிகவும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற வார்த்தைகள் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம். - நா காக்க!

சிம்மம்

பணவரவு : எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். ஆனாலும் மகிழ்ச்சி நாள் முழுவதும் நிறைந்திருக்கும். - ஜாலி டே

கன்னி

மகிழ்ச்சி : வீட்டில் குடும்பத்தினரோடு ஏற்பட்டிருந்த வருத்தங்கள் நீங்கும். உங்கள் மனதைப் புரிந்துகொண்டு நடந்து மகிழ்ச்சியூட்டுவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் உண்டு. - என்ஜாய் தி டே!

துலாம்:

பொறுமை : பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். சிலருக்குக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உறவினர்களால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

விருச்சிகம்

ஆலோசனை : உங்கள் ஆலோசனை வீட்டிலும் வெளியிலும் பாராட்டப்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உணவு விஷயங்களில் அக்கறை அவசியம்! - திறமைக்கு மரியாதை

தனுசு:

உற்சாகம் : காலை முதலே உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் திறமை பாராட்டப்படும். குடும்ப உறுப்பினர்களால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுபச்செய்தி கிடைக்கும். - ஆல் தி பெஸ்ட்!

மகரம்

பிரச்னை : உறவினர்களால் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சகோதர உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். வாக்குவாதம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டிய நாள். - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

கும்பம்

நம்பிக்கை : மனதில் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியும் ஆதாயமும் ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். - நம்பிக்கை அதுதானே எல்லாம்!

மீனம்

நிதானம் : அனைத்தும் சாதகமாக இருந்தபோதும் சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை. சகோதர வகையில் சிரமங்கள் ஏற்படும். குல தெய்வத்தை நினைக்க வேண்டியது. - ரிலாக்ஸ் ப்ளீஸ்!



source https://www.vikatan.com/spiritual/astrology/5-things-to-know-about-thulasi-worship-for-long-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக