Ad

திங்கள், 24 மே, 2021

ஊரடங்கு: 50 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கிய விஜய் ரசிகர்கள்!

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு 24-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில், தற்போது தளர்வுகள் ஏதுமின்றி ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஊரடங்கால் கூலித் தொழிலாளர்கள் பலரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே, தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் முதல் கட்டமாக ரூ.2000 வழங்கப்பட்டது.

நிவாரண உதவி

அதோடு, தன்னார்வலர்கள் பலரும் முன்வந்து தங்களால் முடிந்த உதவிகளைப் பொதுமக்களுக்குச் செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், நகர்ப் பகுதியிலிருக்கும் 50 மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு அரிசி, காய்கறி, முட்டை ஆகியவை அடங்கிய நிவாரணப் பைகளைக் கொடுத்து நெகிழ வைத்திருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் நிவாரணங்களை வாங்கிச் சென்றனர்.

இதுபற்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பர்வேஸ் கூறும்போது, ``எங்கள் அண்ணன் தளபதி விஜய், இந்தக் கொரோனா ஊரடங்கு நேரத்துல சாப்பாட்டுக்கே சிரமப்படுபவர்களை கண்டறிந்து அவங்களுக்கு முடிஞ்ச உதவிகளைச் செய்யுங்கனு அன்புக் கட்டளை விதிச்சிருக்கார். அவரோட ஆலோசனைப்படி நிவாரண உதவிகளைச் செய்து வர்றோம். இந்த நேரத்துல மாற்றுத்திறனாளிகள் ரொம்பவே சிரமப்படுறதா கேள்விப்பட்டோம். ரெண்டு, மூணு பேர்கிட்ட விசாரிச்சப்போ, `இப்போதைக்கு எங்களுக்குக் காய்கறி உள்ளிட்ட சாப்பாட்டுக்குத் தேவையான பொருள்கள் கிடைச்சா ரொம்ப உதவியாக இருக்கும்'னு சொன்னாங்க.

நிவாரண உதவி

உடனே, நகர்ப் பகுதியில உள்ள எல்லா மாற்றுத்திறனாளிகளையும் கணக்கெடுத்து முதல் கட்டமா 50 பேருக்கு அரிசி, முட்டை, காய்கறின்னு ரெண்டு வாரத்துக்குக் கொடுத்தோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுனதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. தொடர்ந்து, மாவட்டத்தில் இருக்குற எல்லா மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவணும். அதோட, இந்த நேரத்துல கஷ்டப்படுகிற பொதுமக்கள் எல்லாருக்கும் எங்களால் முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்" என்றார்.



source https://www.vikatan.com/news/common/vijay-fans-donated-relief-materials-to-differently-abled-persons-in-pudukkottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக