போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
சென்னையின் பிரபல தனியார் பள்ளியான பி.எஸ்.பி.பி-யில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புக்கு வந்ததாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பள்ளியின் டீனுக்கு புகார் அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த விவகாரம். இந்தநிலையில், ஆசிரியர் ராஜகோபாலனை தமிழக காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து ராஜகோபாலன் பள்ளியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/25-05-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக