கோவிட் 19 பரவல் காரணமாகப் பலரும் இன்று மருத்துமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார்கள். பணமில்லாத (Cashless) முறையில் க்ளெய்ம் செய்யும்போது, க்ளெய்ம் செய்யப்பட்ட தொகையில் 40% முதல் 80% வரை மட்டுமே கிடைக்கிறது என்கிறார்கள்.
இதுவே, முதலில் பணம் செலுத்தி பிறகு க்ளெய்ம் செய்யும் முறையில் பெரும்பாலானவர்களுக்கு 40% முதல் 60% தொகை மட்டுமே கிடைக்கிறது என்கிறார்கள்.
முதலில் பணம் செலுத்தி பின் க்ளெய்ம் செய்யும்போது, மருத்துவமனையிலிருந்து பின் வரும் தகவல்கள் மற்றும் அதற்கான விரிவான ரசீதுகளைக் கேட்டுப் பெற வேண்டும். அப்போதுதான் கூடுதல் க்ளெய்ம் தொகை கிடைக்கும்.
நோயாளி மருத்துவமனைலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும்போது:
1. அனைத்து நோய் கண்டறிதல் ( investigations and diagnosis ) அறிக்கைகள் மற்றும் அதற்கான ரசீதுகள்.
2. பயன்படுத்தப்பட அனைத்து மருந்துக்கும் ரசீதுகள்.
3. இதர செலவுகள் என்று போட்டிருந்தால் அதற்கான முழு விளக்கம் மற்றும் ரசீதுகள்.
டிஸ்சார்ஜ் ஆகி வந்த பிறகு, க்ளெய்ம் செய்யும்போது க்ளெய்ம் படிவத்தில் மறக்காமல் மருத்துவனை சீல் மற்றும் மருத்துவர் அல்லது உயர் அதிகாரியின் கையெழுத்தைக் கேட்டுப் பெறவும்.
கோவிட் நோயால் இறக்க நேரிட்டால், அவரது உடமைகளைப் பெறும்போது மறக்காமல் சி.டி ஸ்கேன் ஃபிலிம் கேட்டு பெறவும். க்ளெய்ம் செய்யும்போது அனைத்து இன்ஷுரன்ஸ் நிறுவனங்களும் இதைக் கேட்கின்றன.
நோய்த்தொற்று இருக்குமா என்று தெரியவில்லை. மருத்துவமனைகள் சி.டி ஸ்கேன் ஃபிலிம் தருவதில்லை. சி.டி ஸ்கேன் எடுக்க பணம் செலுத்திய ரசீது மற்றும் சி.டி ஸ்கேன் ரிப்போர்ட் வைத்திருந்தும், சி.டி ஸ்கேன் ஃபிலிம் இல்லை என்றால் க்ளெய்ம் கொடுப்பதில்லை.
கோவிட் நோயாளி இறக்க நேரிட்டால் க்ளெய்ம் செய்யும்போது மறக்காமல் அவரின் அடையாள அட்டை நகல் மற்றும் இறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை க்ளெய்ம் படிவத்துடன் இணைத்து அனுப்பவும். மறக்காமல் அனைத்து ஆவணங்களையும் நகல் (ஜெராக்ஸ்) எடுத்து வைத்துக்கொள்ளவும். இது போன்ற முறையில் க்ளெய்ம் செய்யும்போது விரைவாகவும், கூடுதல் தொகையும் கிடைக்க வழி உண்டு.
- க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர்.
source https://www.vikatan.com/business/finance/tips-to-get-maximum-claim-amount-from-insurance-companies-for-covid-19-treatment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக