Ad

புதன், 26 மே, 2021

இந்தியாவில் உடனடி அனுமதி கேட்கும் ஃபைசர் : ''12 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி போடலாம்!''

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்துக்குக் காரணமாகக் கருதப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் B.1.617-க்கு எதிராகத் தங்கள் தடுப்பூசி அதிக செயல்திறனை வெளிப்படுத்துவதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

தங்கள் தடுப்பூசி, 12 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் போடத் தகுந்தது என்றும், குளிர்சாதன வசதிகள் மூலம் இரண்டு முதல் எட்டு டிகிரி செல்சியல் வெப்பநிலையில் ஒரு மாதம் வரை பாதுகாப்பாக இதைச் சேமித்துவைக்க முடியும் என்றும் ஃபைசர் தெரிவித்துள்ளது.

Also Read: கோவிட் தடுப்பூசி: `12 - 17 வயது சிறார்களிடம் 100% எதிர்ப்பு சக்தி!' - மாடர்னா அறிவிப்பு

இழப்பீடு, ஒழுங்குமுறை தளர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சார்ந்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஃபைசர், ஜூலை, அக்டோபர் மாதங்களுக்கு இடையில் சுமார் ஐந்து கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது. ஃபைசர் தரப்பில் அதன் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லோ உள்ளிட்ட பலர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துள்ளனர்.

கோவிஷீல்டு, கோவாக்ஸின், ஸ்புட்னிக் V என இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் எதற்கும் ஃபைசர் வேண்டும் பாதுகாப்பும், தளர்வுகளும் அளிக்கப்படவில்லை. ஆனால், மற்ற நாடுகளில் அவை வழங்கப்பட்டுள்ளதாக ஃபைசர் வலியுறுத்துகிறது.

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் ஆகிய ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ தடுப்பூசிகளே தற்போது இரண்டு முதன்மையான தடுப்பூசிகளாக இருக்கின்றன; ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் V மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை எல்லாம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களே செலுத்தப்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


source https://www.vikatan.com/government-and-politics/medicine/pfizer-says-its-vaccine-is-highly-effective-against-new-indian-variant

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக