'நமக்கெல்லாம் எப்போதும் தலைக்கு மேலே பிரச்னைதான்' - இந்த வார்த்தைகளை யாராலும் மறுக்க முடியாது. காரணம், முடி உதிர்வுதான். முடிஉதிர்வு என்பது பெண்களுக்கு உலகளாவிய பிரச்னை. நீளமான கூந்தலோ குட்டையான கூந்தலோ முடி உதிர்வு பிரச்னை எல்லாரையும் பாதிக்கவே செய்கிறது.
பணியாற்றும் பெண்கள், குடும்பத் தலைவிகள், மாணவிகள் என யாரையும் விட்டுவைப்பதில்லை இந்தப் பிரச்னை. முடி உதிர்வு பிரச்னை பலநாள்கள் நீடிக்கிறது எனும்போது அது சாதாரண பிரச்னை அல்ல. உடல், மனம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
முடிஉதிர்வு பிரச்னையை அலட்சியப்படுத்தாமல் ஆரம்பத்திலேயே தேவையான கவனிப்பையும் சிகிச்சையையும் எடுக்கும்போது எளிதில் தீர்வு காணலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் 'முடி உதிர்வு A to Z' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை பிப்ரவரி 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தவுள்ளது. சென்னையின் பிரபல ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கவுள்ளார்.
தலத் சலீம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரைகாலஜி துறையில் அனுபவம் வாய்ந்தவர். முடி மற்றும் சரும பராமரிப்பு சார்ந்த சிகிச்சையில் எஸ்பர்ட் ஆவார்.
முடி உதிர்வு பிரச்னைக்கான காரணங்கள், பிரச்னைக்கான எளிய மருத்துவம், பிரசவ காலமும் முடி உதிர்வு பிரச்னையும், பொடுகினால் ஏற்படும் முடிஉதிர்வுக்குத் தீர்வு, கோவிட் பாதிப்பும் முடிஉதிர்வும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கவுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர் களின் கேள்விகளுக்கும் தலத் சலீம் பதிலளிப்பார்.
பிப்ரவரி 28-ம் தேதி மாலை 4.30 முதல் 5.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இந்தக் கட்டணமில்லா இலவச வெபினாரில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
உங்கள் பெயரை முன்பதிவு செய்ய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
Also Read: பெண்களுக்கான ஆன்லைன் பிசினஸ்... அசத்தல் வருமானம்... அவள் விகடனின் வழிகாட்டுதல் பயிற்சி!
source https://www.vikatan.com/health/women/aval-vikatan-conducts-hair-fall-awareness-event-for-women
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக