Ad

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

எடப்பாடியில் பழனிசாமி; போடிநாயக்கனூரில் பன்னீர்செல்வம்?! - அ.தி.மு.க-வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம் #NowAtVikatan

எடப்பாடியில் பழனிசாமி; போடிநாயக்கனூரில் பன்னீர்செல்வம்?

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டப்பேரவைத் தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சித் தலைமையகத்தில் இன்று முதல் விருப்பமனுவை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம்

இதனிடையே வரும் சட்டமன்ற தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் மீண்டும் போட்டியிட இன்று விருப்பமனு அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் எப்போது?

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இந்தியத் தேர்தல் ஆணையம்

இந்த நிலையில் தேர்தல் தேதிகளை இறுதி செய்வது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் குறித்து சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எந்த எந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது, தேர்தல் தேதிகளை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.



source https://www.vikatan.com/news/general-news/24-02-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக