இது வைரல் யுகம். எந்த நேரத்தில் எது வைரலாகும் என்றே தெரிவதில்லை. இப்போது ஹைப்பர் ரியல் கேக் டிரெண்டிங்கில் இருக்கிறது. பிரிட்டனில் உருவான இந்த கேக் பற்றித்தான் வலைதளமெங்கும் கமென்ட்டும் எமோஜிக்களும் சுழன்று கொண்டிருக்கின்றன.
மருத்துவமனையின் படுக்கையொன்றில், நோயாளிக்கான உடையுடன் ஆண் ஒருவர் சிரித்த முகத்துடன் படுத்துக்கொண்டிருக்கிறார். இது முதல் படம். அடுத்த படத்தில் அவருடைய கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருக்கின்றன. மூன்றாவது படத்தில் அந்த ஆணின் வலது கை குளோசப்பில் காட்டப்பட்டிருக்கிறது. நான்காவது படத்தில் அந்தக் கை துண்டு துண்டாக இருக்கிறது. இந்தப் படங்களை சமூக வலைதளத்தில் `ஆமாம். இதுவொரு கேக்தான்’ என்ற வார்த்தைகளுடன் பகிரப்பட்டிருக்கிறது. `மை காட். இதை என்னால நம்பவே முடியல’, `இது நிஜமாவே கேக்தானா’, `பயங்கரமா இருக்கு’ என்பது போன்ற பின்னூட்டங்களுடன் இந்த ஹைப்பர் ரியல் கேக் வைரலாகிக்கொண்டிருக்கிறது.
தூத்துக்குடியைச் சேர்ந்த கேக் ஆர்ட்டிஸ்ட் திவ்யா, ``நானும் அந்த ஹைப்பர் ரியல் கேக்கைப் பார்த்தேன். முன்பெல்லாம் கேக்கில் விதவிதமான ஃபிளேவர்ஸ்தான் வரும். இப்போது ரியல் கேக்ஸ் ரொம்ப பிரபலமாகிட்டு வருது. உதாரணத்துக்கு, உங்க கல்யாண நாள் ஏப்ரல் 12-ம் தேதின்னா, அந்த மாசத்துக்கான காலண்டர் ஷேப்லேயே கேக் செய்வோம். இந்த ஹைப்பர் ரியல் கேக் இப்போ டிரெண்டிங்ல இருந்தாலும், கடந்த சில மாசங்களா பினாட்டா (Pinata) கேக்ஸ்தான் கஸ்டமர் மத்தியில அதிகமா விரும்பப்பட்டு வருது. இந்தக் கேக்கை கத்தியால கட் பண்ணிப் பார்த்தா அதுக்குள்ள சர்ப்ரைஸ் கிஃப்ட் இருக்கும். சில மனைவிகள் தங்களோட கர்ப்பம் உறுதியான பிரக்னென்ஸி கிட்டை கேக் உள்ளே வெச்சு கணவருக்கு சர்ப்ரைஸ் பண்றாங்க.
தவிர, வளைகாப்புக்குக் குழந்தையின் பின்பக்கம் மாதிரி கேக்கை செஞ்சு, அதுல இருந்து க்ரீம் வழியற மாதிரி பரிசு கொடுக்கிறாங்க. இன்னும் சிலர் ஹைப்பர் ரியல் கேக்குல வெஸ்டர்ன் டாய்லெட் மாதிரியெல்லாம் செய்யுறாங்க. சிலது கற்பனைத் திறமையோட பார்த்தவுடனே சாப்பிடத் தோணும். சிலது `உவ்வே’ சொல்ற மாதிரியும் இருக்குது’’ என்கிறார்.
இதுமாதிரியான கேக்குகள் உடனடியாக கவனத்தை ஈர்த்து வைரலானாலும் சாப்பிடும் உணவுப்பொருள்களில் ஒரு எல்லைக்கு மேல் சென்று, இப்படி முகம் சுளிக்கும் விஷயங்களை செய்வது சரியல்ல என்றும் இந்த ட்ரெண்டிற்கு கமென்ட்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
Also Read: ``இனி அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்யணுமா?!" - கலக்கத்தில் கல்லூரி மாணவர்கள்
source https://www.vikatan.com/food/viral/britains-hyper-realistic-cake-which-looks-like-a-man-on-the-hospital-bed-is-viral
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக