Ad

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

சசிகலாவை சந்திக்கிறார் சீமான்... ஜெயலலிதா பிறந்தநாளில் திடீர் சந்திப்பு ஏன்?!

சிறையில் இருந்து வெளியேவந்திருக்கும் சசிகலாவை அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தமிழ்நாட்டின் முக்கியப்புள்ளிகள் யாரும் இன்னும் நேரில் சந்திக்காத நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திக்க இருக்கிறார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது தி.நகர் இல்லத்தில் இருந்தபடியே ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா. அப்போது அவர், "ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கவேண்டும். விரைவில் மக்களைச் சந்திப்பேன்" என்றும் சொல்லியிருந்தார்.

இதற்கிடையே இன்று சசிகலாவை நேரில் சந்தித்துப்பேசயிருக்கிறார் சீமான். இவரோடு இயக்குநரும், நடிகருமான அமீரும் சசிகலாவை சந்திக்க இருக்கிறார். அதேபோல் நடிகர் சரத்குமாரும் இன்று சசிகலாவை நேரில் சந்தித்துப்பேசயிருப்பதாகத் தெரிகிறது. மேலும் திரையுலகச்சேர்ந்த பலரும், பல்வேறு அரசியல் கட்சியினரும், முக்கியப் பிரமுகர்களும் சசிகலாவை நேரில் சந்தித்துப்பேச நேரம் கேட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சசிகலா, தினகரன்

ஜெயலலிதா இறந்து, சிறைக்குச்செல்ல இருந்த இடைப்பட்ட நாட்களில் பல்வேறு அரசியல் கட்சிப்பிரமுகர்களையும், பிரபலங்களையும், பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்துப்பேசினார் சசிகலா. அதேபோன்ற ஒரு சந்திப்பு தற்போது நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதன் தொடக்கப்புள்ளியாகத்தான் இன்றைய சீமான் சந்திப்பு இருக்கும் என்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவருடனும் இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்க விரும்புவதாகவும், ஆட்சியில் தலையிடாமல், கட்சிப்பணிகளை மட்டுமே தாங்கள் பார்க்க நினைப்பதாகவும் சசிகலா தரப்பில் இருந்து எடப்பாடி தரப்புக்கு சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இதற்கு முதல்வர் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார்கள். இந்த நேரத்தில்தான் சினிமா பிரபலங்கள், கட்சித்தலைவர்கள் பலரையும் நேரில் சந்திக்கவைக்கும் படலம் ஆரம்பமாகியிருக்கிறது.



source https://cinema.vikatan.com/politics/seeman-and-other-cine-celebrities-to-meet-sasikala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக