Ad

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

புதிய பிரைவசி பாலிஸியை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படுமா? உண்மை என்ன?

கடந்த மாதம் தங்கள் பிரைவசி பாலிஸி மற்றும் பயன்பாட்டு விதிகளை மாற்றியமைப்பதாகக் கூறி சர்ச்சையில் சிக்கியது வாட்ஸ்அப் நிறுவனம். திடீரென வெளியான இந்த அறிவிப்புக்கு இந்திய அரசு உள்ளிட்ட பல பக்கங்களில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து பிரைவசி பாலிஸி மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என விளக்குவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டது வாட்ஸ்அப் நிறுவனம். அது தொடர்பாக முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Also Read: "நம்புங்க உங்க பிரைவசிக்கு எந்த ஆபத்தும் இல்லை!"- விரிவாக விளக்கும் வாட்ஸ்அப்!

Whatsapp

தற்போது வாட்ஸ்அப் மாற்றியமைத்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும், இந்தப் புதிய பிரைவசி பாலிஸியை ஏற்றுக் கொள்ளாதவர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்ற செய்தி பரவி வருகிறது. அது, உண்மையா என்றால், 'உண்மை... ஆனால் உண்மையில்லை' என்று தான் சொல்ல வேண்டும். மே 15-க்குப் பிறகு இந்த பிரைவசி பாலிஸி அமலுக்கு வருகிறது என்பது உண்மைதான். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களின் கணக்குகள் நீக்கப்படாது. அதற்குப் பதில் நம்மை அவர்களின் பிரைவசி பாலிஸியை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை அனைத்தையும் செய்வார்கள் எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது வாட்ஸ்அப்.

Also Read: ''செய்திகளுக்குப் பணம் கொடுக்க முடியாது!'' - ஆஸ்திரேலிய அரசை மிரட்டுகிறதா ஃபேஸ்புக்?!

மே 15-க்குப் பிறகு பிரைவசி பாலிஸியை ஏற்றுக் கொள்ளாதவர்களால், வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியாது. உங்கள் கணக்கு புழக்கத்தில் இல்லை (Inactive) என வகைப்படுத்தப்படும். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட கணக்குகள் 120 நாள்களுக்குள் நீக்கிப்படும். ஆனால், இந்த 120 நாட்களுக்குள்ளோ அல்லது அதற்குப் பிறகோ கூட பிரைவசி பாலிஸியை ஏற்றுக் கொண்டு சேவையை எந்தத் தடையும் இன்றி பயன்படுத்தலாம். ஒன்று இந்தப் புதிய பிரைவசி பாலிஸியை ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் வேறு குறுஞ்செய்தி தளத்திற்கு மாற வேண்டும்.

WhatsApp

சுற்றி வளைத்து தங்களின் பிரைவசி பாலிஸியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் எனச் சொல்லாமல் சொல்கிறார்கள். பயனர்களுக்கு பிரைவசி பாலிஸி தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க அது தொடர்பான விளக்கங்களையும் செயலி மூலம் பரப்பும் முடிவில் இருக்கிறது நிறுவனம். வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிஸி மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/technology/tech-news/whatsapp-new-privacy-policy-update-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக