Ad

சனி, 20 பிப்ரவரி, 2021

கடலில் மீன் பிடிக்கப்போகும் ராகுல் காந்தி - தேங்காய்ப்பட்டணத்தில் ஒன்றரை கோடியில் தயாராகும் படகு!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல்காந்தி அடிக்கடி வந்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கெனவே தமிழகம் வந்த ராகுல்காந்தி கோவையை மையமாக வைத்து ஐந்து மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கரூர் மாவட்டத்தில் மாட்டுவண்டியில் பயணம் செய்ததுடன் வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காளான் பிரியாணி சமைக்க உதவியதுடன், அவர்களுடன் சேர்ந்து ஓலைப்பாயில் அமர்ந்து சாப்பிடவும் செய்தார்.

அதன் பிறகு புதுச்சேரி பிரசாரத்துக்குச் சென்ற ராகுல் காந்தி மீனவ மக்களுடன் கலந்துரையாடினார். அந்த சமயத்தில் அடுத்தமுறை தென்மாநில விசிட்டின்போது கடலில் மீன் பிடிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து வரும் மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தரும் ராகுல் காந்தியை தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க அழைத்துச் செல்ல புதிய விசைப்படகு தயாராகி வருகிறது. இதற்காக சுமார் 120 அடி நீளம் உள்ள புதிய ஆழ்கடல் மீன்பிடி படகு தாராகிவருகிறது. இந்த புதிய படகின் விலை ஒன்றரை கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேங்காய்ப்பட்டணத்தைச் சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஜார்ஜ் ராபின்சன் செய்து வருகிறார்.

ஜார்ஜ் ராபின்சன்

இது குறித்து ஜார்ஜ் ராபின்சன் கூறுகையில்,``சென்னைக்கு அடுத்தபடியாக மீனவர்கள் நெருக்கமாக வாழுறது கன்னியாகுமரி மாவட்டத்திலதான். அதுவும் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகப் பகுதியைச் சுற்றியிருக்கிற கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் தூண்டில் மீன்பிடித் தொழிலில் கைதேர்ந்தவங்க. இங்க உள்ள மீன்தான் அதிக அளவுல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி, அன்னியச் செலவாணியை ஈட்டித்தருது.

Also Read: மன்னித்துவிட்டேன்... ராகுல் உணர்வுபூர்வ பேச்சும் பின்புலமும் - ஒரு பார்வை!

அதனால மீனவர்கள் பிரச்னை பத்தி ராகுல் காந்தி தெரிஞ்சுக்கவும், தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை அதிகாரிங்க சரியா அமைக்காததுனால அடிக்கடி விபத்து ஏற்படுறது பத்தியும் தலைவர் ராகுல் காந்திக்கு தெரியபடுத்த இருக்கிறோம். அதுமட்டுமில்லாம காமராஜர் முதலமைச்சரா இருந்த சமயத்தில மீன்வளத்துறை அமைச்சரா கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் சைமன் இருந்தாங்க. அவங்கதான் மீனவர்களுக்கு விசைப்படகை அறிமுகப்படுத்தினாங்க.

வில்லேஜ் குக்கிங் சேனல் டீமுடன் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சிதான் அப்பவே மீனவர்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தது. அதுபோல இப்பவும் மீனவர்களுக்கு சீட்டு கொடுக்கணும்னு கோரிக்கை வைப்போம். தேங்காப்பட்டணத்துக்கு வரும் ராகுல் காந்தி மீன் பிடிக்கிறதுக்காக எங்ககூட கடலுக்கு வர இருக்கிறாரு. அவர் கடல்ல வந்து மீன் பிடிக்கிறதுக்காக குளச்சலை சேர்ந்த என் நண்பருடைய புதிய விசைப்படகைத் தயார் செஞ்சிருக்கிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/rahul-to-sail-into-sea-with-thengapattanam-fishermen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக