Ad

சனி, 20 பிப்ரவரி, 2021

`தெர்மாகோல் விஞ்ஞானி டு அயோத்தி பரதன்' வரை அரசியல்வாதிகளின் அதிரிபுதிரி ஸ்டேட்மெண்ட்ஸ்!

``என்னை அனைவரும் தெர்மாகோல் விஞ்ஞானி என கூறுகின்றனர். இந்த தெர்மாகோல் ஐடியா எனக்கு தோன்றியது அல்ல. பொறியாளர்கள், ஆட்சியாளர்கள்தான் கூறினர்கள்'' - செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ
``ராயபுரத்தில் அ.தி.மு.க-வுக்கு எதிராக யார் நின்றாலும் இறுதியில் மூச்சு பேச்சு இல்லாத நிலை ஏற்படும்'' - ஜெயக்குமார்
``எவ்வளவு வேகமாக அல்லது மெதுவாக நாம் செல்கிறோம் என்பதல்ல, சரியான திசையில் செல்கிறோமா என்பது முக்கியம்'' - மோடி
பிரதமர் மோடி
``மக்களோடு மக்களாக இருப்பவன் நான். தேர்தலுக்காக வருபவன் நான் அல்ல'' - ஸ்டாலின்
``அரசுத்துறை வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்ற வேண்டும்'' - நிதின் கட்கரி
ஸ்டாலின்
``அயோத்தி, பரதன் என சொன்னால்தான் பா.ஜ.க-வுக்குப் புரியும் என்பதற்காக இப்படி ஏமாற்றி விளம்பரம் செய்கிறார் ஓ.பி.எஸ்'' - ஸ்டாலின்
``கேரளாவில் பா.ஜ.க ஆட்சியை மலரச் செய்வதே என் நோக்கம். தலைமை விரும்பினால் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்'' - மெட்ரோ மேன் ஶ்ரீதரன்
மெட்ரோ மேன் ஸ்ரீதரன்
``அதிமுக-வில் ஜாதியை வைத்து, எப்போதும் பிரசாரத்தை கையில் எடுத்தது இல்லை'' - மாஃபா பாண்டியராஜன்
`கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது திமுக-விடம் இருந்து ரூ.10 கோடி பெற்றோம் என்பது உண்மைதான்'' - மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பிரேமலதா
``எங்களுக்கு மனம் இருக்கு. அதனால், பணம் தானா வருது'' - பிரேமலதா


source https://www.vikatan.com/government-and-politics/politics/recent-statements-of-political-leaders

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக