சிவகங்கையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சகாயம் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நாட்டில் ஊழல் அகற்றப்பட வேண்டும். ஊழல் இல்லாத நாடுகள்தான் முன்னேற்றப் பாதைக்குச் செல்லும். ஊழல் நாட்டின் முன்னேற்றத்தையும், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தையும் தடுக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வது சவாலான ஒன்றாக உள்ளது. 1 கோடிக்கும் அதிமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து வைத்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர். வேலையின்மை தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. வேலைவாய்ப்பை உறுதி செய்பவர்களே சரியானவர்களாகக் கருதுகிறேன். அறிவிக்கப்படும் திட்டங்கள் உரிய காலகட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
படித்த இளைஞர்களும், ஊடகங்களும், ஏழை, எளிய மக்களை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் கட்சிகளை கண்டறிந்து மக்கள் வாக்களிக்க அறிமுகம் செய்ய வேண்டும். வேளாண் சட்டம் மாநில அரசிடம் உள்ளது. ஆனால், மத்திய அரசு அதனை இயற்றுகிறது. எந்த ஒரு சட்டத்தையும் விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.
அதன் நன்மை, தீமைகளை விளக்கிய பின்னரே இயற்றி இருக்க வேண்டும். கிராமத்தில் இருந்து கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் கிராம வாசிகள் வெளியேறுகின்றனர். எனவே விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும். வேளாண் சட்டங்கள் இயற்றியதை பொறுத்தவரை, விவசாயிகளின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன்" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/protesting-farmers-in-delhi-have-justice-on-their-side-says-sagayam-ias
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக