Ad

திங்கள், 22 பிப்ரவரி, 2021

சத்ரு பயம் நீக்கும் மகாசுதர்சன ஹோமம்... ஜலநாராயணர் சந்நிதியில் தொடங்கியது!

ஜலநாராயணர்பெருமாள் ஜலநாராயணராக அருளும் தலங்கள் வெகுஅபூர்வம். நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் எம்பெருமான் ஜலநாராயணராக அருள்பாலிக்கிறார். அதேபோன்று நம் தமிழகத்தில் - திருவள்ளூர் பூங்காநகரில் அமைந்துள்ள சிவாவிஷ்ணு ஆலயத்தில் சுவாமி ஸ்ரீஜலநாராயணராக எழுந்தருளியிருக்கிறார்.

இந்த அற்புதமான தலத்தில் சக்திவிகடனும் சிவா விஷ்ணு ஆலய நிர்வாகமும் இணைந்து உலக நன்மைக்காகவும் வாசகர்களின் நன்மையை முன்னிட்டும் மகாசுதர்சன ஹோமத்தை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான வாசகர்கள் முன்பதிவு செய்து அவர்களின் பெயரில் சங்கல்பமும் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் சிறப்புடன் தொடங்கப்பட்டுள்ளன.

ஜலநாராயணர்

ஏகாதசி புண்ணிய தினமான இன்று மகாவிஷ்ணுவின் ஆயுதமாகவும் பக்தர்களைக் காக்க ஓடிவருபவருமான சக்கரத்தாழ்வாரைப் போற்றும் இந்த மகாசுதர்சன ஹோமம், தீவினைகளும் தீய சக்திகளும் விலகுமாறு செய்யும் என்கிறார்கள் பெரியோர்கள். சத்ரு பயம், தீராத வியாதிகள், கடன் பிரச்னை அனைத்தையும் நீக்கி, மனோ தைரியமும் ஆரோக்கியமும் செல்வச் செழிப்பும் தரவல்ல இந்த ஹோம வைபவம் மதியம் 2 மணிவரை நடைபெறும். இதன் நேரலை சக்திவிகடன் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பபடுகிறது.

சங்கல்பம் செய்துகொண்ட வாசகர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்), திருவள்ளூர் - பூங்காநகர் சிவாவிஷ்ணு ஆலயத்தில் அருள்மிகு ஜலநாராயணர் சந்நிதியில் விசேஷமாய்ப் பூஜிக்கப்பட்ட காப்பு ரக்ஷை ஆகியவை (5.3.2021 தேதிக்குள்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

இந்த அற்புதமான நேரத்தில் சங்கல்பம் செய்துகொண்ட வாசகர்களோடு பிற வாசகர்களும் வீட்டிலிருந்தபடியே அந்த ஹோம ஆராதனைகளை தரிசனம் செய்து ஶ்ரீசுதர்சனரை நமஸ்கரித்துக் கொள்ளுங்கள். சக்கரத்தாழ்வாரின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கும்.



source https://www.vikatan.com/spiritual/gods/maha-sudharsana-homam-started-in-thiruvallur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக