Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

மதுரையைப் பதறவைத்த ஜவுளிக்கடை தீ விபத்து! - தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி #NowAtVikatan

தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி!

எடப்பாடி பழனிசாமி

மதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் நிதியுதவியைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, காயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

மதுரையைப் பதறவைத்த ஜவுளிக்கடை தீ விபத்து!

மதுரை ஜவுளிக் கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை தீ விபத்து
மதுரை தீ விபத்து
மதுரை தீ விபத்து

மதுரை தெற்குமாசி வீதியில் விளக்குத்தூண் அருகே ஜவுளிக்கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால், அப்பகுதி முழுவதும் புகைமண்டலமானது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாகத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்,. தீயை அணைக்கும் போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

இடிபாடுகளில் சிக்கிய 4 வீரர்களில் இருவர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தநிலையில், மற்ற இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

- செ.சல்மான்

Also Read: `10 நிமிடத்தில் மீட்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை!' -பெற்றோரை நெகிழவைத்த சென்னை தீயணைப்பு வீரர்கள்



source https://www.vikatan.com/news/general-news/14-11-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக