Ad

வியாழன், 26 நவம்பர், 2020

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை! உச்ச நீதிமன்றம் #NowAtVikatan

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை!

மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூரப் பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இட ஒதுக்கீட்டை 2000-ம் ஆண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்பு விதிகளைக் காரணம் காட்டி மத்திய அரசு ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

உச்ச நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவிகித இட ஒதுக்கீடு கிடையாது என உத்தரவிட்டுள்ளது.

Also Read: கோவை:`நான்கரை மணி நேர அறுவை சிகிச்சை' - புலம்பெயர் தொழிலாளியைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்



source https://www.vikatan.com/news/general-news/27-11-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக