Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

உங்க ஓய்வுக்காலத்திற்கு சரியாகத் திட்டமிடுகிறீர்களா? - விடைசொல்லும் நாணயம் விகடன் நிகழ்ச்சி

ஓய்வுக் காலம்... இதை எதிர்கொள்ளத்தான் பலரும் பயப்படுகிறார்கள். 'பணியிலிருந்த காலத்தில் கிடைத்த வருமானம் செலவுக்கே சரியாக இருந்தது; கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த பணத்தில் சின்னதாக ஒரு வீடு; மகன்/மகளுக்கான கல்விச் செலவு, திருமணம் அகியவற்றை நிறைவேற்ற செலவாகிவிட்டது. இந்த நிலையில், ஓய்வுக் காலத்தை எப்படி எதிர்கொள்வது?’ என்ற கவலை பலருக்கும் இருக்கிறது.

ஓய்வுக்காலம்

கடந்த காலத்தில் திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால், கவலை இல்லாத ஓய்வுக் காலம் எல்லோருக்குமே சாத்தியமாகி இருக்கும். ஆனால், பணியிலிருக்கும் நாள்களில் பலருக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு இன்றைய இளைஞர்களுக்குக் கிடைக்கிறது. இன்றைய இளைஞர்கள் கொஞ்சம் திட்டமிட்டுச் செயல்பட்டால், நிம்மதியான ஓய்வுக்காலத்தை நிச்சயம் பெறமுடியும்.

ஆனால், `ஓய்வுக்காலத்தைப் பற்றி இப்போதே திட்டமிட்டுச் செயல்படத் தேவையில்லை’ எனப் பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். ஓய்வுக்காலத்துக்கு ஏன் திட்டமிட வேண்டும், அப்படித் திட்டமிடும்போது என்னென்ன விஷயங்களை எல்லாம் கவனிக்கவேண்டும் என்தற்காக நாணயம் விகடன், ஓய்வுக்கால நிதித் திட்டமிடல் என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது.

Retirement

ஆயுள் அதிகரிப்பு, மருத்துவச் செலவுகள் உயர்வு, தனிக் குடித்தனங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவை ஓய்வுக் கால செலவுகளைக் கணிசமாக அதிகரித்துள்ளன. அந்த வகையில், ஓய்வுக் கால செலவுகளுக்கு என தனியே ஒரு தொகுப்பு நிதியை உருவாக்குவது அவசியமாக உள்ளது. அதற்கு வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சிதான் இந்த ஓய்வுக்கால நிதித் திட்டமிடல்.

நிதி ஆலோசகரும் ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ் நிறுவனத்தின் ((Holisticinvestment.in) இணை நிறுவனர் கே.ராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார்.

டிசம்பர் 12, சனிக் கிழமை - 10.30 am to 12 pm

கட்டணம் ரூ. 350

முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்... https://bit.ly/3nhVFHC



source https://www.vikatan.com/business/finance/retirement-planning-guidance-by-nanayam-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக