Ad

திங்கள், 16 நவம்பர், 2020

சக்தி விகடன் சார்பில் திருவிடைமருதூரில் சிறப்பாக நடைபெற்ற குருப்பெயர்ச்சி சங்கல்பம்!

கடந்த ஐப்பசி மாதம் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.11.2020 அன்று சுக்லபட்ச பிரதமை திதி, சம நோக்குள்ள அனுஷம் நட்சத்திரம், சரத் ருதுவில், சுக்கிரன் ஓரையில், பஞ்சபட்சிகளில் கோழி ஊன் தொழில் புரியும் வேளையில், தட்சிணாயனப் புண்ய காலத்தில், இரவு 9 மணி 34 நிமிடத்தில், மிதுன லக்னத்தில் - நவாம்சச் சக்கரத்தில் கும்ப லக்னத்தில், பிரகஸ்பதி எனும் குருபகவான் தன் சொந்த வீட்டிலிருந்து சர வீடாகிய சனி பகவானின் வீடான மகர ராசிக்குள் பிரவேசித்தார்.
குருப்பெயர்ச்சி சங்கல்பம்

இதனால் குருப்பெயர்ச்சி நாளில் 12 ராசிக்காரர்களுமே குரு பகவானை தரிசித்து வழிபடுவது நலமளிக்கும் என்பர் ஆன்மிகப் பெரியோர்கள். இந்த குரு பெயர்ச்சியில் மேஷம், கடகம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் ராஜயோகத்தை வழங்குவார் என்று ஜோதிடம் சொல்கிறது. மேலும் ரிஷப ராசி லக்னகாரர்களுக்கு நன்மையையும் தடையும் உண்டாகலாம். மிதுனம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளுக்கு சில தடைகளும் சிரமங்களும் உண்டாகலாம். மகரம், கும்ப ராசிகளுக்கு சமமான பலன் தருவார் என்றும் கணிக்கப்பட்டது.

எனவே அதற்கேற்ப வழிபாடுகளும் பரிகார பூஜைகளும் செய்து கொள்வது நலமளிக்கும் எனப்பட்டது. இதனால் சக்தி விகடன் வாசகர்களாகிய உங்களின் நலன் வேண்டி திருவிடைமருதூர் குருபகவான் சந்நிதியில் குருப்பெயர்ச்சி சிறப்பு சங்கல்பவழிபாடு 15.11.2020 அன்று நடைபெற்றது. சக்தி விகடன் இணைய தளத்தின் வழியே பதிவு செய்து கொண்ட 332 பேர்களுக்கும் அவரவர்களின் நட்சத்திரங்கள் சொல்லி திருவிடைமருதூர் சாம்பவி தட்சிணாமூர்த்தி சந்நிதியில் சிறப்பு சங்கல்பம் நடைபெற்றது.

குருப்பெயர்ச்சி சங்கல்பம்
நமது வாசகர்கள் அனைவருக்கும் பூரண ஆயுளும் நிலைத்த செல்வமும், நீடித்த புகழும் கிடைக்க மனமார வேண்டிக்கொண்டோம்.


source https://www.vikatan.com/spiritual/news/gurupeyarchi-2020-special-pooja-conducted-by-sakthi-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக