Ad

திங்கள், 16 நவம்பர், 2020

`தமிழத்தில் மூலை மூலைக்கு டாஸ்மாக் திறந்துள்ளனர்!' - பா.ஜ.க முருகன் ஆவேசம்

தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``பலதரப்பட்ட மக்கள், தாங்களாகவே முன்வந்து பா.ஜ.க-வில் இணைந்து வருகிறார்கள். தினசரி ஆயிரக்கணக்கான பேர் எங்கள் கட்சியில் இணைகிறார்கள். நரேந்திர மோடிஜி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பதுதான், இதற்கு முக்கியக் காரணம். இன்னும் பல முக்கியத் தலைவர்கள் கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

முருகன்

Also Read: “முருகன் யாருக்குச் சொந்தம்?”

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைபோல, பல அதிகாரிகள் வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு எங்கள் கட்சியில் இணையத் தயாராக இருக்கின்றனர். வேல் யாத்திரை மீண்டும் தொடங்கப்படுகிறது. 21-ம் தேதி சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரமாண்ட வரவேற்புக் கொடுப்போம்.

அமித்ஷா இங்கு வரும்போது, எங்களுக்கு பெரிய ஊக்கத்தை கொடுக்கும். தேர்தலுக்கு முன்பு அவர் சென்ற மாநிலங்களில் எல்லாம் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். அதனால்தான், அவரது வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தைக் கொடுக்கும் என்கிறோம். மு.க.அழகிரி எங்கள் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், நாங்கள் அவரிடம் பேசவில்லை. வானதி சீனிவாசன் கருத்து தொடர்பாக, நமது அம்மா நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தை நான் பார்க்கவில்லை.

முருகன்

அதைப் பார்க்காமல் அதுகுறித்து பேச முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கொள்கைகள் இருக்கிறது. கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு. தற்போதைய சூழ்நிலைக்கு நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்கிறது. சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து, அப்போதுதான் முடிவு செய்யப்படும்.

கந்தசஷ்டி கவசம் அவமானப்படுத்தப்பட்டது. ஒரு கூட்டம் தொடர்ந்து இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தி வந்தனர். அவர்களால் மனம் காயமடைந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும், கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு ஆதரவு சொல்லும் விதமாகவும், மத்திய அரசின் நலத்திட்டங்களை எடுத்துச் செல்லும் விதமாகவும் தான் வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மூலை மூலைக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

முருகன்

அங்கு யாருமே முகக்கவசங்கள் அணிவதில்லை. தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை. தி.மு.க கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. தீபாவளிக்காக கடைவீதிகளில் கூட்டம் கூடியது. இதையெல்லாம் கேள்வி கேட்காமல், கோயிலுக்கு செல்வதை மட்டும் கேள்வி கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-state-leader-l-murugan-slams-tn-government-over-tasmac-shops

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக