Ad

சனி, 14 நவம்பர், 2020

பீகார்: அதிக இடங்களை கைபற்றிய பா.ஜ.க; அடுத்த முதல்வர் யார்? - இன்று முக்கிய முடிவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை தேர்தல் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் தான். அம்மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களில் வென்று மாநிலத்தில் 2-வது தனிப்பெரும் கட்சியாகவும் அதன் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் பெற்றி பெற்றன.

பீகார் தேர்தல் களம்

ஐக்கிய ஜனதா தளம் கட்சி, அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க வை விட 31 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக பெற்றிருந்தாலும், தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியின் படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தான் முதல்வராவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியை கலைக்க அமைச்சரவை முடிவு செய்து அதற்கான கடிதமும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நிதிஷ்குமாரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பதவி ஏற்கும்வரை இடைக்கால முதல் மந்திரியாக நீடிக்குமாறு நிதிஷ்குமாரை கேட்டுக்கொண்டார்.

Also Read: மிஸ்டர் கழுகு: பீகார் ரிசல்ட் எதிரொலி... காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க!

இந்நிலையில், பாட்னாவில் நிதிஷ்குமார் இல்லத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டசபை பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு நடக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதில் எம்.எல்.ஏக்கள் இணைந்து முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

நிதிஷ் குமார், பீகார்

நிதிஷ்குமார் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ் குமார், ``நவம்பர் 15 -ம் தேதி(இன்று) கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றார்.

Also Read: பீகார்: ஹில்சாவில் 12 வாக்குகள்; ராம்காரில் 189 வாக்குகள்! - தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்ததா?



source https://www.vikatan.com/news/politics/who-is-the-next-bihar-cm-impotent-meeting-today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக