Ad

திங்கள், 16 நவம்பர், 2020

சென்னை: ராட்சத அலையில் சிக்கிய 5 பேர்! - அம்மாக்களின் கண்முன்னே நடந்த சோகம்

சென்னை வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவை சேர்ந்தவர் ஜெனிஃபர். இவரின் குழந்தைகள் மார்ட்டின், மார்க்கிரெட். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் விஷ்ணு, துர்கா, அருள்ராஜ் (19). இவர்கள் 5 பேரும் மார்ட்டினின் அம்மா ஜெனிஃபர் மற்றும் விஷ்ணுவின் அம்மா உமா ஆகியோருடன் நேற்று மாலை காசிமேடு கடற்கரைக்குச் சென்றனர். கடற்கரையில் ஜெனிஃபர், உமா ஆகியோர் அமர்ந்திருந்தனர். சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர் அருள்ராஜ் ஆகியோர் கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் 5 பேரும் சிக்கி மாயமாகினர்.

சடலத்தை தூக்கிச் செல்லும் காட்சி

அதைப்பார்த்த ஜெனிஃபர், உமா ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர். தங்களின் குழந்தைகளைக் காணவில்லை என்று சத்தம் போட்டு கதறி அழுதனர். இதையடுத்து மீனவர்கள் கடலில் அவர்களைத் தேடினர். உடனடியாக காசிமேடு, துறைமுகம் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதோடு ராயபுரம், எஸ்பிளேனேடு, மெரினா உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் 5 பேரை கடலில் தேடினர். அப்போது அருள்ராஜ் மட்டும் சடலமாக நேற்று மீட்கப்பட்டார். அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போதிய வெள்ளிச்சம் இல்லாததால் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

Also Read: 2 நாள்களாகக் கொட்டித் தீர்க்கும் கனமழை! - நேபாள வெள்ளத்தில் சிக்கி 43 பேர் உயிரிழப்பு

மீட்பு பணி

இதையடுத்து இன்று காலை முதல் மீட்பு பணி தொடங்கப்பட்டது. அப்போது 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தைகளின் சடலங்களைப் பார்த்த பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர்.தீபாவளியையொட்டி விடுமுறையை சந்தோஷமாக கழிக்க கடற்கரைச் சென்றவர்கள் அம்மாக்களின் கண் முன் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வண்ணாரப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/2-girls-2-boys-and-youth-died-in-kasimedu-beach

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக