திருவெற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கிண்டி, திருவான்மியூர் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்து வருகிறது.
அதேபோல சென்னை புறநகர் பகுதிகளிலும் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில், இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கனமழை எச்சரிக்கையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை தொடரும் எனவும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்திருக்கிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/heavy-rain-in-tn-chennai-and-surrounding-area