Doctot Vikatan: வருடம் ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்ய பல மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். பேக்கேஜாக வரும் அதில் குறிப்பிடப்படும் அனைத்து டெஸ்ட்டுகளையும் ஒருவர் செய்துகொள்ள வேண்டியது அவசியமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வது என்பது இன்று மிகவும் பரவலான ஒன்றாக இருக்கிறது. பல கிளினிக்குகளும் லேபுகளும் போட்டிபோட்டுக்கொண்டு பேக்கேஜ்களை அறிவிக்கிறார்கள்.
ஒருவருக்கு அவசியமான டெஸ்ட் அந்த பேக்கேஜில் இல்லாமலிருக்கலாம். அதேபோல அவசியமே இல்லாத டெஸ்ட்டுகள் அதில் இருக்கலாம். எனவே மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் பேக்கேஜையோ, விளம்பரத்தையோ பார்த்து முடிவெடுக்காமல், உங்கள் மருத்துவரை முதலில் கலந்தாலோசித்து அவர் பரிந்துரைக்கும் டெஸ்ட்டுகளை எடுக்கலாம்.
சில மருத்துவர்களும் மருத்துவமனைகளும் தங்கள் பேஷன்ட்டுகளுக்கேற்ப பர்சனலைஸ் செய்து கொடுப்பதும் உண்டு. அதாவது உங்கள் உடல்நலத்துக்கேற்ப, உங்கள் குடும்ப பின்னணியில் உள்ள நோய்களுக்கேற்ப, உங்கள் வாழ்வியல் மற்றும் பழக்கவழக்கங்களுக்கேற்ப அதை பர்சனலைஸ் செய்து கொடுப்பார்கள்.
ஒருவருக்கு சிகரெட் பழக்கம் இருக்கலாம், குடிப்பழக்கம் இருக்கலாம், சர்க்கரைநோய் இருக்கலாம். அதையெல்லாம் அலசி ஆராய்ந்து அந்த நபருக்கு அவசியமான டெஸ்ட்டுகளை செய்யப் பரிந்துரைப்பார்கள். எனவே 64 டெஸ்ட்டுகள், 108 டெஸ்ட்டுகள் என எண்ணைப் பார்த்து முடிவெடுக்காமல் உங்கள் உடல்நலனுக்குக்கேற்ப, உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் டெஸ்ட்டுகளை மட்டும் எடுத்தால் போதுமானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/news/healthy/doctor-vikatan-master-health-checkup-are-all-the-tests-included-in-the-package-necessary
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக