Ad

வியாழன், 20 அக்டோபர், 2022

இஎம்ஐ-யில் செல்போன் வாங்கி பரிசளித்த கணவர்; அதிருப்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட மனைவி!

ஒடிசா மாநிலத்தின் மலகங்கிரி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் கன்ஹேய், ஜோதி மண்டல் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் திருமணம் ஆனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய கணவர் இ.எம்.ஐ-யில் வாங்கிய செல்போனை தனக்கு பரிசாக வழங்கியதால், அதிருப்தியடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், போலீஸார் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் போலீஸார் தெரிவித்திருப்பதாவது, ``கன்ஹேய், இ.எம்.ஐ-யில் அந்த செல்போனை வாங்கியிருக்கிறார். தன் மனைவிக்கு இவர் இந்த இ.எம்.ஐ குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் கன்ஹேய், இறுதித் தவணைத் தொகையை செலுத்தியவுடன், நிதி நிறுவன அதிகாரிகள் தம்பதியினரின் கையெழுத்து பெறுவதற்காக அவர்களுடைய வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர்.

செல்போன்

அப்போதுதான் ஜோதிக்கு தான் பயன்படுத்திய செல்போன் இ.எம்.ஐ-யில் வாங்கியது தெரியவந்திருக்கிறது. இருப்பினும் கன்ஹேய் இ.எம்.ஐ-யில் செல்போன் வாங்கி பரிசளித்ததை ஜோதியிடம் கூறவில்லை. இதனால் கோபமடைந்த ஜோதி, தன் கணவர் கன்ஹேயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே மோதல் முற்றிய நிலையில், கணவன் முன்பு ஜோதி திடீரென விஷம் குடித்திருக்கிறார். இதைப் பார்த்த கன்ஹேய் அதிர்ச்சியில் தரையில் சரிந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி, இருவருமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஜோதி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். கன்ஹேய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்" எனக் கூறினார்.



source https://www.vikatan.com/news/crime/odisha-woman-kills-herself-after-know-about-husband-gifted-phone-brought-under-emi-scheme

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக