Ad

சனி, 29 அக்டோபர், 2022

சூரசம்ஹாரம்: பகைவருக்கு அச்சம்; பணிபவருக்கு ஞானம் வழங்கும் முருகனின் ஆயுதங்கள் 26!

பகைவருக்கு அச்சத்தையும் பணிபவருக்கு ஞானத்தையும் வழங்கும் முருகனின் ஆயுதங்கள் 26!

முருகக்கடவுள்

அக்டோபர் 30-ம் தேதி நாளை சூரசம்ஹார நிகழ்வு: ஆணவத்தில் ஆண்டவனையே எதிர்த்து மாமரமாய் நின்ற சூரனை சம்ஹாரம் செய்த கந்தவேளைப் போற்றிப் பணிவோம்!

முருகன்

கந்தனின் கரங்களில் இருக்கும் ஆயுதங்கள் பகைவருக்கு அச்சத்தையும் பணிபவருக்கு ஞானத்தையும் வழங்க வல்லவை. முருகனின் ஆயுதங்கள் 26 என்கின்றன புராணங்கள்! அவை...

முருகப்பெருமான்

ஞானமே அஞ்ஞானத்தை வெல்லும்.  ஆணவம், கன்மம், மாயை எனும் சூரபத்மன், சிங்கமுகன், தாருகன் ஆகியோரை அழித்து ஞானம் அளித்த ஞானவேலே முதன்மையான ஆயுதம்.

வேல் பூஜை

'குக்குடக் கொடி தரித்த பெருமாளே'...என்கிறது திருப்புகழ். அறியாமை எனும் இருளைப் போக்கி மெய்யறிவைப் புகட்டும் முருகனின் கொடியும் ஒரு ஆயுதமே.

சேவல் கொடி

`அங்குசம் கடாவ ஒருகை' என்கிறார் நக்கீரர். மதத்தை அடக்கி அன்பை வலியுறுத்தும் அங்குசமும் முருகனின் ஆயுதமே.

முருகப்பெருமான்

பகைவர்களின் கைகளைக் கால்களைக் கட்டப் பயன்படும் பாசம் எனும் கயிறும் முருகனின் ஒரு ஆயுதமே.

முருகப்பெருமான்

வள்ளி மயிலைக் கரம் பிடிக்க வேடனாக வந்த முருகன் தாங்கி நின்ற ஆயுதம் வில்லும் ஒரு ஆயுதமே.

முருகப்பெருமான்

பிறைமதி என்ற அம்பு கொண்டு முருகன் தாக்க தீவினைகள் மாளும் என்கின்றன ஞான நூல்கள்.

தோரணமலை முருகப்பெருமான்

அசுர சக்திகளின் சிரம் அறுக்க ஆறுமுகன் ஏந்திய ஆயுதம் கத்தி. முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனத்தில் இதைக் காணலாம்.

குதிரை வாகனத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான்

கத்தி ஏந்தும் கந்த பெருமான், கூடவே கேடயமும் ஏந்தியிருப்பார். இது மோதித் தாக்கவும், தாக்குதலில் இருந்து காக்கவும் பயன்படும்.

கந்தன்

கட்டுவாங்கம் எனும் கூரிய நீண்ட வாள். இடுப்பில் செருகிய இந்த வாள் கந்தனின் கம்பீரத்தைக் கூட்டும்.

கந்தன்

காங்கேயர் என்ற வடிவில் முருகப்பெருமான் கோடரி எனும் பரசு ஆயுதம் தாங்குவதாகக் கூறப்படுகிறது.

முருகப்பெருமான்

ஈசனுக்குரிய சூலத்தையும் ஸ்வாமிநாதனாம் முருகப்பெருமான் சூரசம்ஹார நாளில் தாங்கி இருந்தான் என்கின்றன நூல்கள்.

முருகப்பெருமான்

திகிரி, கதை எனப்படும் குண்டாந்தடியை திருமால் அளிக்க முருகன் தாங்கி நின்றானாம்.

திருத்தணி

திருமாலுக்கு உரிய சக்கரத்தையும் முருகன் தாங்கி நின்றான். அரிசிற்கரைபுத்தூரில் உள்ள முருகன் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளான்.

சூரசம்ஹாரம்

உறுதியான எதையும் உடைக்கும் வஜ்ரம் எனும் ஆயுதத்தை ஏந்திய முருகன் அசுர சக்திகளின் எலும்புகளை உடைத்தான்.

சூரசம்ஹாரம்

தண்டம் எனும் நீளமான கைத்தடி ஏந்திய முருகனை பல ஆலயங்களில் தரிசித்து இருக்கலாம். தண்டாயுதபாணி என்றே இதனால் பெயரும் பெற்றான்.

தண்டாயுதபாணி!

சரவணபவன் என்ற வடிவத்தில் 12 கரங்களில் ஒன்றில் உளியை (டங்கம்) வைத்துள்ள முருகன் விசேஷமானவன்.

முருகன்

தாரகாரி என்ற வடிவத்தில் உலக்கை எனும் தோமரத்தை ஒரு கரத்தில் பிடித்துள்ளான் கந்தன்.

கந்தன்

சௌரபேய சுப்ரமண்யரின் கரங்களில் ஒன்று மன்மதனுக்குரிய கரும்புவில்லை ஏந்தியுள்ளது.

சுப்ரமண்யன்

அதேபோல மற்றொரு கரம் மலரம்புகள் எனும் தாமரை, அசோகு, மா, முல்லை, நீலம் ஆகிய பூக்களால் ஆன பாணத்தையும் கொண்டுள்ளது.

பழநி முருகன்

நாதத்தை எழுப்பி மாயை அகல முருகன் ஏந்திய ஆயுதம் மணி. இதுவும் ஒரு ஞானப்படை. 'பாடின் படுமணி' என்கிறார் நக்கீரர்.

பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் சூரசம்ஹாரம்

பிரம்மசாஸ்தா கோலத்தில் முருகப்பெருமான் ஏந்திய ஆயுதம் ஜபமாலை. இதுவும் ஒரு ஞானப்படை.

முருகப்பெருமான்

ஜபமாலையோடு மற்றொரு கரத்தில் இருப்பது கமண்டலம். கிண்டி எனும் இது ஒரு மரத்தின் காயால் ஆனது. இது பிரம்மனுக்கு உரியது.

தோரணமலை முருகன்

ஞானமெனும் தாமரையும் முருகனுக்கான ஞானப்படையே. திருச்செந்தூர் முருகன் வலது கையில் தாமரை ஏந்தியிருப்பார்.

திருப்பரங்குன்றம் முருகன்

அக்னிஞாத சுப்ரமணியர்  கோலத்தில் யாகாக்னியை வளர்க்க
சுருவமும், நெய்(ஆஜ்ய) பாத்திரமும் ஏந்தி இருப்பார்.

காங்கேய சுப்ரமணியர் கோலத்தில் பூரண கும்பம் ஏந்தி இருப்பார். கோடியக்கரை அமிர்தகரை சுப்ரமணியனை தரிசியுங்கள்.

குன்றத்தூர் முருகன்

சேவலையே கரத்தில் ஏந்திய அற்புதக் கோலமும் கொல்லிமலை ஆலயத்தில் இருந்ததுண்டு என்கிறார்கள் பெரியவர்கள்.

lord murugan


source https://www.vikatan.com/ampstories/spiritual/gods/holy-festival-thiruchendur-kandha-sasti-special-article

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக