உத்தரப்பிரதேசத்தில் 28 வயது இளைஞன் ஒருவர், தான் ஒரு பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டேன் என்றும், தன்னுடைய தற்கொலைக்கு சம்பந்தப்பட்ட பெண்ணும், அவரின் குடும்பத்தினரும் தான் காரணம் என வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த அக்டோபர் 8-ம் தேதியன்று, பிலிபிட் மாவட்டத்தில் உள்ள பௌரியாயில், இளைஞன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் அந்த வீடியோவை பதிவுசெய்துவிட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இதுபற்றி ஊடகங்களில் வெளியான தகவலின்படி வீடியோவில், ``அந்தப் பெண்ணை காதலித்தேன், ஆனால் அவளுடன் ஒருபோதும் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் நானே அவளை நிராகரித்துவிட்டேன். அதைத்தொடர்ந்து செப்டம்பர் இறுதியில் அவள் என் மீது போலீஸில் புகாரளித்தாள். அதனால் எங்கு கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில், ஒரு வாரத்துக்கும் மேலாகக் கரும்பு தோட்டத்தில் நான் தலைமறைவாக இருந்தேன். அந்தப் பெண்ணின் பொய்க் குற்றச்சாட்டு என் சுயமரியாதையையும், மனநிலையையும் கடுமையாகப் பாதித்தது" என தற்கொலை செய்துகொண்ட இளைஞன் கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீஸில் புகாரளித்த இளைஞனின் தந்தை, ``அந்தப் பெண் என் மகனை பிளாக்மைல் செய்துகொண்டிருந்தாள். இதனால், என் மகன் மிகவும் மன அழுத்தத்திலிருந்தான். அதுமட்டுமல்லாமல் வீடியோ மற்றும் தற்கொலைக் குறிப்பு, அக்டோபர் 11 அன்று தான் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வேறு வழியின்றி நான் அதை வெளியிட்டேன்" என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து இளைஞனின் தந்தை அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த பிலிபிட் போலீஸார், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306(தற்கொலைக்குத் தூண்டுதல்)-ன் கீழ் சம்பந்தப்பட்ட பெண் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரி ரோஹித் குமார், ``இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டு, அவர்களைச் சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் சேகரித்து வருகிறோம்" என நேற்று தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/crime/28-year-old-young-man-suicide-after-woman-false-complaint-police-filed-fir-against-9-people-include-that-woman
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக