பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது!
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமர் மோடியின் (personal) ட்விட்டர் பக்கத்தில் இன்று அதிகாலை, இந்தியாவில் பிட்காயின் அங்கீரிக்கப்பட்டு விட்டதாக ட்வீட் ஒன்று பகிரப்பட்டது. பிட்காயினுக்கு எதிரான நிலைப்பாட்டில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருந்து வரும் நேரத்தில், இந்தியாவில் பிட்காயின் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக அதுவும் பிரதமரின் கணக்கிலிருந்து வெளியான அந்த பதிவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து, அந்த பிட்காயின் ட்வீட் பலராலும் ரீ-ட்வீட் செய்யப்பட்டது.
ஆனால், அடுத்த சில மணி நிமிடங்களில் அந்த பதிவு மோடியின் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், ``இன்று அதிகாலை திடீரென சிறிதுநேரம் பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் பிட்காயினை இந்தியா அங்கீகரித்துவிட்டதாக பதிவிடப்பட்டிருந்து. பின்னர் அது நீக்கப்பட்டது" என்று தெரிவித்தனர். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ``பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்வி்ட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் இந்த விவகாரம் ட்விட்டர் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு், உடனடியாக அந்த கணக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட இந்த இடைப்பட்ட நேரத்தில் பதிவிடப்பட்ட விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம், ஒதுக்கிவிடுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-12-12-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக