Ad

செவ்வாய், 7 டிசம்பர், 2021

விழுப்புரம்: சாலையோர ஓடையில் கவிழ்ந்த அரசுப் பேருந்து! - பள்ளி மாணவர்கள் உட்பட 11 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள சித்தாத்தூர் பகுதியிலிருந்து அரசு நகர்ப்புற பேருந்து ஒன்று விழுப்புரம் நோக்கி நேற்று மாலை புறப்பட்டுள்ளது. ஆலம்பாடி, முகையூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்களுடனும், பொதுமக்களுடனும் பயணித்த அந்த அரசு பேருந்து ஆயந்தூர் எனும் இடத்தில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திடீரென பேருந்தின் எதிரே குறுக்கிட்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன பேருந்து ஓட்டுநர், விபத்து ஏற்படாமல் இருக்கு பிரேக் அடித்து சற்று இடப்புறமாக திருப்பியுள்ளார்.

Also Read: கள்ளக்குறிச்சி: `பட்டாசுக் கடையில் தீ விபத்து; 6 பேர் உயிரிழப்பு; முதல்வர் இரங்கல்!'

முண்டியம்பாக்கம் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த அரசுப் பேருந்து, சாலையின் ஓரத்தில் இருந்த ஓடையில் பக்கவாட்டில் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பள்ளி மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும், உடனடியாக சிகிச்சை பெரும் வகையில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 6 பள்ளி மாணவ, மாணவிகளும், 5 பயணிகளும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறும் காணை காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாகவும், வழக்கு பதியப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் பொன்முடி

இந்நிலையில், மாவட்ட எம்.எல்.ஏ-கள், மாவட்ட ஆட்சியருடன் நேற்று (07.12.2021) மாலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர் பொன்முடி, காயமடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களை பார்த்து ஆறுதல் கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/news/accident/more-than-10-people-including-school-children-were-injured-in-government-bus-overturned-in-villupuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக