நாகை கடல் பகுதி வழியாக படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்துப்படுவது தொடர்ந்து வரும் நிலையில் இதனை தடுக்க போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தஞ்சாவூர் சரக டிஐஜியின் தனிப்படை போலீஸ் ஆந்திரா மாநிலத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகை கடத்தி வரப்பட்ட ரூ 1 கோடி மதிப்பிலான கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்புல்ன்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் கஞ்சா மொத்த வியாபாரியான ஒருவரையும் தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. கஞ்சா மொத்த விற்பனை செய்யும் கும்பல் ஆந்திராவிலிருந்து கஞ்சாவினை கடத்தி வந்து சில்லறை வியாபாரிகளிடம் கொடுக்கின்றனர். மேலும் கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தி வருவதும் அதிகரித்து வருவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கார் மூலம் கஞ்சா கடத்திய கும்பலை போலீஸ் கைது செய்ததுடன், கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் பல நாள்கள் பிடிபடாமல் இருந்த பிரபல கஞ்சா வியாபாரியான நாகப்பட்டினத்தை சேர்ந்த குஷ்பு என்கிற அன்புசெல்வன் ஆகியோரையும் கைது செய்தனர்.
Also Read: வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 140 கிலோ கஞ்சா; பெண் கைது; சுற்றி வளைக்கப்பட்ட கஞ்சா கும்பல்!
இதனை தொடர்ந்தும் கஞ்சா கடத்துவது தொடர்ந்துள்ளது. ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதும் தொடர்ந்தது. இதையடுத்து தஞ்சாவூர் சரக டி.ஐ,ஜி பிரவேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் மகேந்திரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமி, தலைமை காவலர்கள் இளையராஜா, சுந்தர்ராமன், விஜய், ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸ் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஆந்திராவிலிருந்து நாகப்பட்டினம் வழியாக ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதை கண்டுபிடித்தனர். ஆம்புலன்ஸில் இருந்த 200 கிலோ கஞ்சா, ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்த இருந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த மார்சல் டெரன்ஸ் ராஜா (34)என்பவரை பிடித்து கைது செய்தனர்.
Also Read: வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 140 கிலோ கஞ்சா; பெண் கைது; சுற்றி வளைக்கப்பட்ட கஞ்சா கும்பல்!
இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க தஞ்சை சரக தனிப்படை போலீஸ் டீம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கஞ்சா கடத்த முடியாமல் கடத்தல் கும்பல் திணறினர். இதையடுத்து ஆம்புலன்ஸில் வைத்து கஞ்சா கடத்தினால் போலீஸிடம் சிக்க மாட்டோம் என நினைத்துள்ளனர். அதன்படி ஆந்திரா மாநிலத்திலிருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்துள்ளனர். ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்க விட்டு ஆந்திராவிலிருந்து தஞ்சை வழியாக நாகை சென்றடைந்தவர்கள் சந்தேகம் வராமல் இருப்பதற்காக நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியுள்ளனர்.
கஞ்சா கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தங்களது செல்போனில் பேசிய தகவல் தனிப்படை போலீஸ் டீமிற்கு கிடைக்க உடனடியாக கஞ்சா, ஆம்புலன்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் பிரபல கஞ்சா மொத்த வியாபாரி ஒருவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை தொடர்ந்து வருவதாக தெரிவித்தனர். தனிப்படை போலீஸ் படைக்கு டிஐஜி பிரவேஷ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/news/crime/police-arrested-cannabis-sales-gang-while-smuggling-in-ambulance
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக