Covid Questions: என் வயது 35. கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டேன். அடுத்த நாள் முதல் கையைத் தூக்க முடியாத அளவுக்கு கை வீங்கிவிட்டது. ஊசிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். பிறகு ஏன், இப்படி ஆக வேண்டும்? நரம்பு மருத்துவரைப் பார்த்தால் தீர்வு கிடைக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.
``தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி இருப்பதாகப் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள். அவர்களில் அநேகமாக அனைவருக்குமே 2 - 3 நாள்களில் அந்த வலி சரியாகிவிடுகிறது. அரிதாகச் சிலருக்கு அந்த வலி ஒன்றிரண்டு வாரங்களுக்கு நீடிக்கலாம்.
அவர்களில் சிலருக்கு அந்த இடத்தில் வீக்கம், புண்ணாவது, அக்குள் பகுதியில் வலி போன்றவையும் இருக்கலாம். எப்படியிருப்பினும் இவை எல்லாமே ஒன்றிரண்டு வாரங்களில் தானாகச் சரியாகிவிடும். ஊசி போடுவதால் நிகழ்கிற சாதாரண பின்விளைவுகள்தான் இவையெல்லாம். இவற்றில் எதுவும் நீண்டகால பிரச்னையாக மாற வாய்ப்பில்லை. ஒருவேளை அதையும் தாண்டி உங்களுக்கு இந்தப் பிரச்னை இருப்பதாக உணர்ந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்."
Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குணமான பிறகும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள்; நிஜமா, பிரமையா?
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/how-to-get-rid-off-hand-pain-caused-due-to-covid-vaccination
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக