திருவள்ளூரை அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் அதே பகுதியில் உடற்பயிற்சிக்கூடம் நடத்திவருகிறார். அந்த உடற்பயிற்சிக்கூடத்தில் ஆனந்தனின் மகன் அரவிந்தன் (21) என்பவர் ஜிம் ட்ரெயினராக இருந்துவருகிறார். கடந்த ஆரு மாதங்களுக்கு முன்பு உடற்பயிற்சிக்கூடத்துக்கு வந்த இளைஞர் ஒருவருக்கு அரவிந்தன் பயிற்சியளித்துவந்திருக்கிறார். அப்போது இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறியிருக்கின்றனர். அதனால், அந்த இளைஞர் அரவிந்தனைத் தனது வீட்டுக்கு அடிக்கடி அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, அந்த இளைஞரின் 10-ம் வகுப்பு படிக்கும் தங்கைக்கும், ஜிம் ட்ரெயினர் அரவிந்தனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
Also Read: இன்ஸ்டாகிராம் பழக்கம்; நம்பிய பள்ளி மாணவி! - 32 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணம் பறித்த இளைஞர்
அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அரவிந்தன், சிறுமியைக் காதலிப்பதுபோல் நடித்து, கடந்த ஆறு மாதங்களாக அவருடன் நெருங்கிப் பழகிவந்திருக்கிறார். சிறுமியின் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவரை வெளியில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். அப்படி ஒவ்வொரு முறை வெளியில் அழைத்துச் சென்று அத்துமீறும்போதும், அரவிந்தன் அதைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவிந்தன்மீது சந்தேகமடைந்த சிறுமி, ``எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள்?’’ என்று கேட்க, ஆத்திரமடைந்த அரவிந்தன் ``அப்படித்தான் எடுப்பேன். உன்னுடைய வீடியோக்கள் என்னிடம் ஏராளமாக இருக்கின்றன. வெளியில் யாரிடமாவது கூறினால் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன்!" என்று மிரட்டியிருக்கிறார். அதனால் செய்வதறியாமல் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துவந்த சிறுமி, நேற்று முன்தினம் திடீரென தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் அவரை பத்திரமாக மீட்டு, தற்கொலைக்கான காரணத்தைப் பொறுமையாக விசாரித்திருக்கின்றனர்.
Also Read: `கருவேல மரத்தில் இளம்பெண் உடல்; காதலன் தலைமறைவு?!' - தற்கொலையா... கொலையா?
அப்போது, சிறுமி அரவிந்தனின் பாலியல் அத்துமீறல் அராஜகங்களைப் போட்டுடைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர், உடற்பயிற்சியாளர் அரவிந்தன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட மகளிர் போலீஸார், இளைஞர் அரவிந்தனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
source https://www.vikatan.com/news/crime/police-arrested-gym-coach-who-sexually-abused-and-threatened-school-girl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக