Ad

ஞாயிறு, 9 மே, 2021

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழகத்தில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு! #NowAtVikatan

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், எதெற்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எதெற்கெல்லாம் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறித்து தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது...

முழு ஊரடங்கில் அனுமதிக்கப்படாதவை..!
முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டவை!

தமிழகத்தில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் மே 10 ஆம் தேதியான இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 4 மணி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. முழு ஊரடங்கின்போது பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை எனவும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முழு ஊரடங்கு

எனினும் தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி - மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். அங்கும் ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹோட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி உண்டு. டீக்கடைகளிலும் பகல் 12 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு தனியார் பஸ் போக்குவரத்து மற்றும் வாடகை கார் ஆட்டோ ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 மணிவரை அனுமதிக்கப்படும். பெட்ரோல் டீசல் பங்குகள் தொடர்ந்து இயங்கும். மக்கள் தடுப்பூசி போடுவதற்காக ஊரடங்கின் போது அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/10-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக