Ad

வியாழன், 6 மே, 2021

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்! #LiveUpdates

பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்ட ஸ்டாலின்...!

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்பு... இல்லத்தில் இருந்து கிளம்பிய மு.க.ஸ்டாலின்...

Posted by Vikatan EMagazine on Thursday, May 6, 2021

பதவியேற்பு விழாவில் ஓ.பி.எஸ்!

பன்னீர் செல்வம்

ஆளுநர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வு தொடங்க இருக்கிறது. நிகழ்சியில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டுள்ளார். மேலும் தனபால், நவநீதிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில், கே.எஸ் அழகிரி, திருநாவுக்கரசர், மதிமுக சார்பில் வைகோ, விசிக வின் திருமாவளவன் என பல தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்!

Also Read: ஸ்டாலின் முதல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை... யாருக்கு என்ன துறை?! -வெளியானது அமைச்சரவை பட்டியல்

இன்று காலை ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்க இருக்கும் நிலையில், இன்று மாலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோனை நடத்தி, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தலைவர்கள் வருகை...!

ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்திருக்கிரார்கள். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். ஸ்டாலினுடன் 34 பேர் கொண்ட அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள்.

தமிழக முதல்வராக இன்று பதவியேற்கிறார் ஸ்டாலின்!

சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 6 -ம் தேதி நடைபெற்றது. தொடர்ச்சியாக மே மாதம் 2 -ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி 159 இடங்களை கைபற்றியது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சின்னத்தில் நின்றவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதன் மூலம் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியானது.

இதனை தொடர்ந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் மே 4-ம் தேதி நடைபெற்றது. திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். தொடர்ந்து ஸ்டாலின் சட்டமன்ற குழுத் தலைவரக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மு.க. ஸ்டாலின்

இந்நிலையில், மே 5 -ம் தேதிகாலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, திமுக எம்எல்ஏ-க்கள் 125 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற 8 பேர் என சேர்த்து 133 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார். மேலும், அமைச்சரவைப் பட்டியலையும் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார்.

ஸ்டாலின் இல்லம் அருகே

அதனை தொடர்ந்து ஆளுநரின் தனிச் செயலாளர் ஆனந்தராவ் படேல், மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில் சென்றார். அப்போது, ஸ்டாலினை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக, அழைப்புக் கடிதத்தை ஸ்டாலினிடம் அவர் வழங்கினார். இதனை தொடர்ந்து மே மாதம் 7-ம் தேதி காலை, அதாவது இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார் ஸ்டாலின். அவருடன் அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/mk-stalin-swearing-in-ceremony-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக