Ad

வியாழன், 6 மே, 2021

`தமிழக எதிர்க்கட்சிதலைவர் யார்?!’ - இன்று மாலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் #NowAtVikatan

தமிழக எதிர்க்கட்சிதலைவர் யார்?

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. 65 இடங்களை மட்டுமே கைபற்றி தோல்வியை தழுவியது. திமுக தலைவர் ஸ்டாலின் 7-ம் தேதி (இன்று) முதல்வராக அரியணை ஏறுகிறார். இதனிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்க இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதிமுக தலைமை அலுவலகம்

இக்கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிப்பதில் எடப்பாடி பழனிசாமி, மற்றும் பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. மேலும், கட்சியின் கொறடாவும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/07-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக