இன்றைய பஞ்சாங்கம்
19. 5. 21 வைகாசி 5 புதன்கிழமை
திதி: சப்தமி காலை 8.23 வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: ஆயில்யம் காலை 11.40 வரை பிறகு மகம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம்: காலை 7.30 முதல் 9 வரை
நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம்: பூராடம் காலை 11.40 வரை பிறகு உத்திராடம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
வழிபடவேண்டிய தெய்வம்: ராஜமாதங்கி தேவி
யாகங்கள் செய்வதால் பலன்கள் உண்டா ?
வேதகாலம் முதல் இருக்கும் வழிபாட்டு முறைகளில் ஒன்று யாகங்கள் செய்வது. அக்னி வளர்த்து அதில் தேவர்களை ஆவாஹனம் செய்து அவர்களுக்கு ஆகுதி சமர்ப்பித்து நம் வேண்டுதல்களைச் சொல்லும் இந்த வழிபாட்டுமுறை பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மிடையே இருக்கிறது. இன்றும் தனிப்பட்ட சடங்குகளிலும் ஆலயங்கள் மற்றும் ஆன்மிக அமைப்புகள் போன்ற பொது அமைப்புகள் மூலமும் சிறிதும் பெரிதுமாக வேள்விகள் நடத்துவதைப் பார்த்திருக்கிறோம். இவற்றில் சிலவற்றை ஹோமம் என்றும் சிலவற்றை யாகம் என்றும் சொல்கிறோம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்னும் தகவலோடு யாகங்கள் செய்வதால் பலன்கள் உண்டா என்னும் கேள்விக்கான விடையையும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
இன்றைய ராசிபலன்
விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மேஷம் : நிதானம் : வழக்கமான பணிகளில் கவனம் தேவை. பணவரவும் கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவைப்படும் நாள். வார்த்தைகளால் வம்பு வரலாம். - டேக் கேர் ப்ளீஸ்!
ரிஷபம் : வெற்றி : வேலைகளைத் திட்டமிட்டபடி முடிப்பீர்கள். மனதில் நம்பிக்கை நிறைந்து விளங்கும். சகோதரர்களால் சிறு பிரச்னை ஏற்பட்டு விலகும். - வெற்றிக்கொடிகட்டு!
மிதுனம் : தாமதம் ; செயல்களில் சிறு தாமதம் ஏற்பட்டும் என்றாலும் சாதகமாக முடியும். குழப்பங்களுக்கு இடம் கொடாமல் செயல் ஆற்றுவதன் மூலம் வெற்றி பெறலாம். - ஆல் இஸ் வெல்!
கடகம் : உற்சாகம் : உற்சாகம் நிறைந்த நாள். குடும்பத்தில் இருந்த வருத்தங்கள் தீரும். போதுமான பணவரவும் உண்டாகும். செலவுகளில் மட்டும் சிக்கனம் தேவை. - சிக்கனம் தேவை இக்கணம்!
சிம்மம் : ஆரோக்கியம் : செயல்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவசர முடிவுகளும் வேண்டாம். - ஹெல்த் இஸ் வெல்த்!
கன்னி : மகிழ்ச்சி : குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். செயல்களும் அனுகூலமாகும். நண்பர்கள் தேவைக்கு உதவுவார்கள். தேவைகளுக்காக வெளியில் செல்லும்போது கவனம் தேவை. - என்ஜாய் தி டே!
துலாம் : நன்மை ; நன்மைகள் நடைபெறும் நல்ல நாள். தந்தைவழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் குறித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவீர்கள். - நாள் நல்ல நாள்!
விருச்சிகம் : பதற்றம் : அனைத்தும் நல்லவிதமாக நடைபெறும் என்றாலும் தேவையில்லாத பதற்றம் மனதில் இருக்கும். குடும்பத்தினர் ஆறுதலாக இருப்பர். - பதறாத காரியம் சிதறாது!
தனுசு : சோர்வு ; முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் ஏற்படும் நாள். நிதானமாகச் செயல்படுங்கள். முக்கியப் பணிகளை பிற்பகலில் செய்யுங்கள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்
மகரம் : நற்செய்தி : முற்பகலில் எதிர்பார்த்த நற்செய்திகள் தேடிவரும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். இறைவழிபாடு செய்யுங்கள். - எல்லாம் நன்மைக்கே!
கும்பம் : ஆதாயம் : சகோதர உறவுகளால் நன்மைகள் நடைபெறும் நல்ல நாள். செயல்களில் இருந்த தடைகள் விலகும். செயல்கள் அனுகூலமாகும். - ஜாலி டே!
மீனம் : அமைதி : மனதில் உற்சாகமும் குடும்பத்தில் அமைதியும் நிறைந்திருக்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். செலவுகளில் கவனம் தேவை. - இறைவன் இருக்க பயம் ஏன்?
source https://www.vikatan.com/spiritual/astrology/what-is-the-difference-between-homam-and-yagam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக