தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்து கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. பிரசார வேனில் வந்தவர், தொண்டர்களிடம் கை அசைத்து உற்சாகப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் சென்னை மியாட் மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கைக்கு பின் முழு விபரம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/vijayakanth-admitted-in-hospital-by-3-am
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக