Ad

ஞாயிறு, 9 மே, 2021

'எந்தக் கடவுளை வணங்குவது?’ - இறைவழிபாடு குறித்து ஆன்மிகம் சொல்வது என்ன?

இன்றைய பஞ்சாங்கம்

10. 5. 21 சித்திரை 27 திங்கள்கிழமை

திதி: சதுர்த்தசி இரவு 11.08 வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம்: அசுவினி இரவு 9.35 வரை பிறகு பரணி

யோகம்: மரணயோகம் இரவு 9.35 வரை பிறகு அமிர்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 முதல் 9 வரை

எமகண்டம்: காலை 10.30 முதல் 12 வரை

நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

பஞ்சாங்கம்

சந்திராஷ்டமம்: உத்திரம் இரவு 9.35 வரை பிறகு அஸ்தம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

இறைவழிபாடு குறித்து ஆன்மிகம் சொல்வது என்ன?

இறைவழிபாடுதான் சாமானியர்களுக்கான ஆறுதலும் அடைக்கலமும். தெய்வங்களில் இஷ்ட தெய்வம். குல தெய்வம், கிராம தெய்வம் என்று பல தெய்வங்கள் நம் வழிபாட்டில் உள்ளன. காரணம் அவரவர் அவரவர் மனதுக்குப் பிடித்த இறைவனை வழிபட வேண்டும் என்பதற்குதான். ஆனால் ஒருவர் தான் பிறந்த மதத்தின் கடவுள்களைவிடுத்து வேற்று மதத்தின் கடவுள்களை வழிபடத் தொடங்கும்போது அவருக்குள் பல சந்தேகங்கள் எழுகின்றன. சிலர் தான் அனைத்து கடவுள்களையும் வழிபடலாமா? அப்படியே வணங்குவதாக இருந்தால் எந்தக் கடவுளை வணங்கலாம் என்றெல்லாம் தங்களுக்குள் குழம்பிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட வாசகர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு பதிலாக அமைகிறது இன்றைய அதிகாலை சுபவேளை. எந்தக் கடவுளை வணங்குவது? - இறைவழிபாடு குறித்து ஆன்மிகம் சொல்வது என்ன... என்னும் கேள்விகளுக்கான பதிலை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

10.5.21

மேஷம்

மகிழ்ச்சி : குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். - ஆல் தி பெஸ்ட்!

ரிஷபம்

நன்மை : நன்மைகள் நடைபெறும் நாள். பணவரவும் உண்டு. எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். செயல்கள் அனுகூலமாக முடியும். - ஆல் இஸ் வெல்!

மிதுனம்

உற்சாகம் : மனதில் உற்சாகமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். குடும்பத்தினர் பணிகளைப் பகிர்ந்து கொள்வார்கள். - நாள் நல்ல நாள்!

கடகம்

இழுபறி : செயல்களில் சிறு இழுபறி காணப்பட்டாலும் நல்லவிதமாக முடியும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவது அவசியம். - எல்லாம் அவன் செயல்!

சிம்மம்

தெளிவு : நேற்றுவரையிருந்த குழப்பங்கள் தீரும். தெளிவு உண்டாகும். என்றாலும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் காரிய வெற்றி ஏற்படும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கன்னி

பொறுமை : பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். செயல்கள் அனுகூலமாகும் என்றாலும் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். - டேக் கேர் ப்ளீஸ்

துலாம்:

பணவரவு : எதிர்பார்த்த பணவரவு வாய்க்கும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். பேச்சில் மட்டும் கவனம் தேவை. வார்த்தைகளால் வம்பு வரலாம். - என்ஜாய் தி டே!

விருச்சிகம்

செலவு : எதிர்பார்த்த பணம் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் உதவிகேட்டு வருவார்கள். சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். - சிக்கனம் தேவை இக்கணம்!

தனுசு:

சுறுசுறுப்பு : காலைமுதலே சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் மனம்போல் நடந்துகொள்வார்கள். நண்பர்களோடு தொலைபேசி மகிழ்வீர்கள் - ஜாலி டே!

மகரம்

வெற்றி : முயற்சிகள் வெற்றியாகும். சகோதர உறவுகள் உதவிகரமாக இருப்பார்கள். சிலர் பணிச்சுமை காரணமாக அலைச்சலை மேற்கொள்ள வேண்டிவரும். - வெற்றி நிச்சயம்!

கும்பம்

மன உறுதி : தொடங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னை ஒன்றுக்குத் தீர்வு காண்பீர்கள். செலவுகள் அதிகரிப்பது கவலை தரும். - துணிவே துணை!

மீனம்

கலகலப்பு : குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் நிறைந்திருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள உகந்த நாள். சுபச்செய்திகள் வந்து சேரும். - இனி எல்லாம் சுபமே!



source https://www.vikatan.com/spiritual/astrology/what-spiritual-says-about-worship

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக