5. 5. 21 சித்திரை 22 புதன்கிழமை
திதி: நவமி மாலை 6.15 வரை பிறகு தசமி
நட்சத்திரம்: அவிட்டம் பகல் 1.45 வரை பிறகு சதயம்
யோகம்: மரணயோகம் பகல் 1.45 வரை பிறகு சித்தயோகம்
ராகுகாலம்: பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம்: காலை 7.30 முதல் 9 வரை
நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம்: புனர்பூசம் பகல் 1.45 வரை பிறகு பூசம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
அக்னி நட்சத்திர காலத்தில் சூரிய வழிபாடு செய்வது எப்படி?
சூரியபகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் மாதமே சித்திரை. மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். நவகிரகங்களில் செவ்வாய் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் தன்மையைப் பெற்றது. சூரிய பகவானும் நெருப்பு வடிவானவர் என்பதால் அவர் மேஷ ராசியில் சஞ்சரிக்கும்போது உச்சம் பெறுகிறார். உச்சம் என்றால் பலம் கூடி இருத்தல் என்று பொருள். சூரியனின் பலம் கூடி வெப்பம் அதிகமாக வெளிப்படும் காலமாக இந்த மாதம் அமைகிறது. அதிலும் பரணி நட்சத்திரத்திலும் கிருத்திகை நட்சத்திரத்திலும் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம்வரையிலும் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலமாகும்.
இதில் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தை முன் கத்தரி என்றும் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம்வரை சஞ்சரிக்கும் காலத்தைப் பின்கத்தரி என்றும் சொல்கிறோம். நடுவில் இருக்கும் கிருத்திகை நட்சத்திர காலமே கத்தரி வெயிலின் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நாள்களாகும். இந்த ஆண்டு நேற்று முதல் கத்திரி வெயில் காலம் தொடங்கியது.
பொதுவாக அக்னி வெயில்காலத்தில் ஆரோக்கியம் மேம்பட சூரிய வழிபாடு செய்வது வழக்கம். 7 நாள்கள் செய்ய வேண்டிய சூரிய வழிபாட்டை மேற்கொள்வது எப்படி அதனால் உண்டாகும் பயன்கள் எவை என்பன குறித்த தகவல்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
இன்றைய சுருக்கமான ராசிபலன்
விரிவான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மேஷம்
பொறுமை : இன்று அனைத்தும் அனுகூலமாக விளங்கும். ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாகும். உறவினர்களிடம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. - ஆல் இஸ் வெல்!
ரிஷபம் :
கவனம் : புதிய முயற்சிகளிலும் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். நிதானித்துப் பயணிக்க வேண்டிய நாள் - ரிலாக்ஸ் ப்ளீஸ்!
மிதுனம்
நிதானம் : குழப்பங்கள் தீரும் என்றாலும் மறைமுகத் தொல்லைகள் நீடிக்கும். நிதானமாகச் செயல்பட அனைத்தும் நல்லவிதமாக முடியும். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!
கடகம்
சோர்வு : இன்று முற்பகல் அனுகூலமாகவும் பிற்பகல் சோர்வு நிறைந்ததாகவும் இருக்கும். இறைவழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். - எல்லாம் அவன் செயல்!
சிம்மம்
நன்மை : தொடங்கிய செயல்கள் நல்ல விதமாக முடியும். நீண்ட நாள்களாக நிலுவையிலிருந்த பணம் கைக்குவரும். குடும்பத்தினர் உங்கள் மனம் மகிழுமாறு நடந்துகொள்வார்கள். - ஜாலி டே
கன்னி
தன்னம்பிக்கை : மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். குடும்பத்தின் உறவினர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். - நாள் நல்ல நாள்
துலாம்:
பதற்றம் : செயல்களில் நிதானம் தேவை. அனைத்தும் சாதகமாக முடியும் என்பதால் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது அவசியம். - பதறாத காரியம் சிதறாது!
விருச்சிகம்
வெற்றி : நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். சகோதர உறவுகள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். - நினைத்ததை முடிப்பவர்!
தனுசு:
பணவரவு : தொடங்கும் செயல்கள் சாதகமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொண்டு மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்கள். பணவரவும் உண்டு. - ஆல் தி பெஸ்ட் !
மகரம்
ஆரோக்கியம் : கட்டாயம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வழக்கமான பணிகளையும் கவனத்தோடு செய்யுங்கள். சிலருக்குச் சிறு அலைச்சலும் ஏற்படும். - ஹெல்த் இஸ் வெல்த்!
கும்பம்
உதவி : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை முயன்று நிறைவேற்றுவீர்கள். - இனி எல்லாம் சுபமே!
மீனம்
செலவு : புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் முன்பாக கவனம் தேவை. பேசும்போது சொற்களில் கவனம் தேவை. செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனம் தேவை - செலவே சமாளி!
source https://www.vikatan.com/spiritual/astrology/how-to-do-sun-worship-during-agn-natchathiram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக