Ad

செவ்வாய், 11 மே, 2021

மதுரை: கோடை மழையால் நாசமான நெற்பயிர்கள்... கலங்கும் விவசாயிகளுக்கு உதவுமா அரசு?

மதுரையில் சில மணி நேரம் பெய்த கோடை மழையாலும், வீசிய காற்றாலும் மதுரை அருகேயுள்ள பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சோழவந்தான் வட்டாரத்திலும், மதுரை கிழக்கு தாலுகா களிமங்கலம், ஓவலூர், குன்னத்தூர் ஆகிய கிராமங்களில் சுமார் 1500 ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்திருந்தனர்.

சேதமான நெற்பயிர்

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கோடை மழையில் களிமங்கலம், ஓவலூர், குன்னத்தூர் பகுதியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நிலத்தோடு சாய்ந்து போனது.

நிலத்தில் உள்ள நெல் மற்றும் வைக்கோல் எவ்வித பயனின்றி போனதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

நம்மிடம் பேசிய களிமங்களத்தை சேர்ந்த பெரியவர், ``குன்னத்தூர் பெரிய கம்மா மூலம் இப்பகுதியில் விவசாயம் செஞ்சுட்டு வர்றோம். இப்ப கடன் வாங்கி விவசாயம் செய்தோம். கோடை மழையால் இப்படி ஒரு பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. இப்போ என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம். நஷ்டமடைந்துள்ள எங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார் வேதனையுடன்.

வேதனையில் விவசாயி

இவர்களின் பயிர் சேதம் பற்றி வருவாய்த்துறை மற்றம் விவசாய அதிகாரிகள் எந்த விசாரணையும் நடத்தவில்லை என்றும் புகார் சொல்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/agriculture/madurai-farmers-request-govt-help-as-their-paddy-fields-were-drowned-due-to-rain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக