மல்யுத்த வீரர் சாகர் ராணா (23) கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இரண்டு முறை ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற மல்யுத்த வீர்ர் சுஷில் குமாரை 18 நாட்கள் தொடர் தேடலுக்கு பின் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சுஷில் குமாருக்கு சம்பந்தப்பட்ட வீட்டில் சாகர் அவரது நண்பர்களுடன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். ஒருநாள் சுஷில் திடீரென வீட்டைக் காலி செய்யும்படி சொல்ல சாகர் மறுத்ததாகவும், பின்னர் வலுக்கட்டாயமாக சாகரை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சாகர் ஸ்டேடியத்தில் சுஷில் குறித்து அவதூறு பரப்பியதாக சொல்லப்படுகிறது. கார் பார்கிங்கில் சுஷில் மற்றும் அவரது நண்பர்கள் சாகரையும் அவரது நண்பர்கள் இருவரையும் தாக்கினர். பலத்த காயம் பட்ட சாகர் சம்பவம் நடந்த மே-4 அன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். கோபமடைந்த சுஷில் சாகரை தாக்க முனைந்தார். கார் பார்கிங்கில் சுஷில் மற்றும் அவரது நண்பர்கள் சாகரையும் அவரது நண்பர்கள் இருவரையும் தாக்கினர். பலத்த காயம் பட்ட சாகர் சம்பவம் நடந்த மே-4 அன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கொலையின் முக்கிய குற்றவாளியான சுஷில் குமாரை போலீசார் தேடி வர தலைமறைவானார் சுஷில் குமார் . கடந்த 18 நாட்களில் உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், டெல்லி, ஹரியாணா, சண்டிகர், பஞ்சாப் ஆகிய மாநில எல்லைகளைக் கடந்து எந்த இடத்திலும் தங்காமல் தப்பித்து வந்தார். மேலும் சிம் கார்டுகளையும் தொடர்ந்து மாற்றியுள்ளார். குமாரை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 1லட்சமும் அவரது கூட்டாளி அஜய் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 50000 வெகுமதி அறிவித்து உத்தரவிட்டனர் காவல் துறையினர்.
கொலை நடந்த அடுத்த நாள் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் ஆசிரமம் ஒன்றில் தங்கினார் சுஷில் குமார். பின் டெல்லி வந்த சுஷில் மீரட் சுங்க சாவடியில் கண்டுபிடிக்கப்பட்ட சுஷில் அங்கிருந்து தப்பி ஹரியாணா மாநிலம் பகதூர்கர் சென்றுள்ளார். அங்கிருந்து சண்டிகர் சென்று பஞ்சாப் மாநிலம் பாடிண்டா சென்றுள்ளார். மீண்டும் சண்டிகர் திரும்பி குருகிராமத்தில் தங்கியுள்ளார். பின்னர் ஞாயிறு காலை இருசக்கர வாகனத்தில் மேற்கு டெல்லியில் உள்ள முண்ட்காவில் அவரது கூட்டாளி அஜய் உடன் தப்பி செல்லும்போது காவலர்களிடம் சிக்கினார்.
காவல் துறையிடம் இருந்து சுஷிலும் அவரது நண்பரும் தப்பிக்க பப்லூ என்பவர் உதவியுள்ளார். ஹரியாணா மாநிலம் பகதூர்கரை சேர்ந்த பப்லூ பின்னர் குமார் பயன்படுத்திய கார் குறித்த தகவல்களை போலீசாரிடம் கூறினார். சுஷில்குமாரின் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதுடன் கவன ஈர்ப்பு சுற்றறிக்கையும் ஜாமீன் அல்லாத கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/olympic-medalist-sushil-kumar-arrested-in-delhi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக