இன்றைய பஞ்சாங்கம்
18. 5. 21 வைகாசி 4 செவ்வாய்க்கிழமை
திதி: சஷ்டி காலை 8.40 வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: பூசம் காலை 11.18 வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை
எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை
நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம்: மூலம் காலை 11.18 வரை பிறகு பூராடம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
வழிபடவேண்டிய தெய்வம்: வனதுர்கை
நஷ்டத்திலிருக்கும் வியாபாரம் செழிப்பாக...
இன்று பலருக்கும் பிரச்னை வாழ்வாதாரம். நன்கு போய்க்கொண்டிருக்கும் தொழில் எதிர்பாராத காரணங்களால் திடீரென்று நஷ்டத்தை சந்திக்கும். இது பலருக்கும் அதிர்ச்சியாகவும் வாழ்வையே மாற்றும் சூழலாகவும் மாறிவிடும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதிலும் இந்த கொரோனா காலத்தில் வியாபாரிகள் படும் துன்பம் சொல்லிமாளாது. வியாபாரத்தை விரிவு படுத்துகிறோமோ இல்லையோ இருக்கும் வியாபாரத்தை இழந்துவிடக்கூடாது என்றும் இழந்த வியாபாரத்தை எப்படியாவது மீட்டுவிடவேண்டும் என்றும் போராடும் வியாபாரிகள் அநேகம். அப்படிப்பட்டவர்கள் தங்கள் நஷ்டத்திலிருந்து மீண்டு வியாபாரத்தை லாபகரமாக்க ஆன்மிகம் பல பரிகாரங்களைச் சொல்கிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பைரவர் வழிபாடு. வியாபாரம் செழிக்க பைரவரை எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
இன்றைய சுருக்கமான ராசிபலன்கள்
விரிவான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மேஷம் : இழுபறி : செயல்கள் அனைத்திலும் சிறு இழுபறி காணப்படும் என்பதால் பொறுமை அவசியம். எதிர்பார்த்த நற்செய்தி பிற்பகலுக்கு மேல் தேடிவரும். - எல்லாம் நன்மைக்கே!
ரிஷபம் : அனுகூலம் : செயல்கள் அனைத்தும் அனுகூலமாகும். ஆரோக்கியமும் மேம்படும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். பிற்பகலுக்குமேல் பண வரவும் உண்டு. - ஆல் இஸ் வெல்!
மிதுனம் : உதவி : உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செயல்களும் அனுகூலமாகும். அதேநேரம் செலவுகளும் அதிகரித்த வண்ணம் இருக்கும். - சிக்கனம் தேவை இக்கணம்!
கடகம் : கவனம் : வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். செலவுகள் அதிகரிப்பதால் சிலர் கடன் வாங்க நேரிடும். பேச்சிலும் நிதானம் தேவை. - டேக் கேர் ப்ளீஸ்!
சிம்மம் : பிரச்னை : வரவும் செலவும் சமமாக இருக்கும் நாள். உறவுகளால் சிறு பிரச்னை ஏற்பட்டு விலகும். தாய்வழி உறவுகளால் பணவரவு உண்டாகும். - நாளை உங்க நாள்!
கன்னி : செலவு : செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கருத்துவேறுபாடுகள் நீங்கி நல்ல மனநிலை வாய்க்கும். - செலவே சமாளி!
துலாம் : நிதானம் : முக்கியமுடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்படும் என்பதால் நிதானம் தேவை . உணவு விஷயங்களிலும் அக்கறை அவசியம். - கேர் ஃபுல் ப்ளீஸ்!
விருச்சிகம் ; தாமதம் : செயல்கள் அனைத்தும் சிறு தாமதத்துக்குப் பிறகே முடியும். குழப்பங்கள் மெள்ள விலகும். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் நிறைந்திருக்கும். - தாமதமாகலாம் ஆனால் தடைப்படாது!
தனுசு ; பொறுமை : இன்றும் சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் நிதானமும் பொறுமையும் அவசியம். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். - இறைவன் இருக்க பயம் ஏன்?!
மகரம் ; பணவரவு : எதிர்பார்த்த பண வரவு உண்டாகும். கொடுத்துத் திரும்ப வராமல் இருந்த கடன் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் மனம்போல் நடந்துகொள்வர். - என்ஜாய் தி டே!
கும்பம் : சாதகம் : இன்று முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களிடமிருந்து நல்ல தகவல் வந்து சேரும். - சாதகமான ஜாதகம் இன்று!
மீனம் : நன்மை : நேற்றுவரையிருந்த ஆரோக்கியக் குறைவுகள் நீங்கும். காரியங்கள் சிறு இழுபறிக்குப் பின் முடியும். பணவரவு இருப்பதால் செலவுகளை சமாளிப்பீர்கள். - நாள் நல்ல நாள்!
source https://www.vikatan.com/spiritual/astrology/astrological-remedies-to-make-your-business-profitable
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக