Ad

திங்கள், 8 மார்ச், 2021

குடும்பத்தலைவிக்கு தி.மு.க மாதம் 1000 ரூபாய், அ.தி.மு.க 1500 ரூபாய் உரிமைத் தொகை! உங்கள் கருத்து?

தமிழகத் தேர்தல் நெருங்கிவிட்டது. பல்வேறு கட்சிகள், பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் சலுகைகளை அள்ளி வழங்கி வருகின்றன. தொடக்கத்தில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இல்லத்தரசிகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தது. இதனிடையே சமீபத்தில் தி.மு.க சார்பாக ஸ்டாலின், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். அது சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பி வரும் நிலையில், நேற்று எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க சார்பாக, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1500 ரூபாய் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தாங்கள் அறிவிக்கவிருந்த இந்தத் திட்டம் வெளியே கசிந்தது எனவும், அதை ஸ்டாலின் காப்பியடித்து முன்னரே அறிவித்துவிட்டார் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து தங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-dmk-and-admk-remuneration-scheme-for-women

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக