Ad

புதன், 31 மார்ச், 2021

திரும்பவும் வருது டிகுவான் 5 சீட்டர்!

மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன் டிகுவான். ஐந்து பேர் உட்காரக் கூடியதாக இருந்த டிகுவானில், சிற்சில மாற்றங்களைச் செய்து புதிய BS-6 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப அதை 7 சீட்டராக மாற்றி, `டிகுவான் ஆல் ஸ்பேஸ்' என்று புதிய பெயரையும் கொடுத்து அறிமுகப்படுத்தியது ஃபோக்ஸ்வாகன். இப்போது புதிய SUVW Strategyபடி, ஃபோக்ஸ்வாகன் மீண்டும் 5 சீட்டர் டிகுவானை அறிமுகப்படுத்த இருக்கிறது.

டிகுவானை வெளியே இருந்து வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்க ஃபோக்ஸ்வாகன் அனுமதித்தது. அப்போது தெளிவான விஷயம் என்னவென்றால், இந்த 5 சீட்டர் - பழைய 5 சீட்டர் கிடையாது. காரணம், இதை இயக்கப்போவது டீசல் இன்ஜின் இல்லை. பெட்ரோல் இன்ஜின். ஹூண்டாய் டூஸான் மற்றும் ஜீப் காம்ப்ஸ் ஆகியவற்றோடு போட்டி போட இருக்கும் இது, புனேவில் இருக்கும் தொழிற்சாலையில்தான் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. பெரும்பாலும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் உதிரிபாகங்களைக் கொண்டு இது அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது என்பதால், இதன் விலை போட்டியாளர்களைச் சமாளிக்கக் கூடியதாக இருக்கும் என்று நம்பலாம். டைகூன் தயாரிக்கப்பட இருக்கும் அதே புதிய MQB ப்ளாட்ஃபார்மில்தான் இது தயாரிக்கப்பட இருக்கிறது.

இந்த ஃப்ளாட்ஃபார்மின் தனிச்சிறப்பு என்னவென்றால், எஸ்யூவி மட்டுமல்ல; ஹேட்ச்பேக், ஸ்போர்ட்ஸ் எஸ்யூவிக்களைக்கூட இதே ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கலாம். உலக அளவில் தயாராகும் ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப், ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் ஆடி Q3 ஆகிய கார்கள் எல்லாம்கூட இந்த ப்ளாட்ஃபார்மில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிதி ஆண்டுக்குள் நான்கு எஸ்யூவிக்களை அறிமுகப்படுத்துவது என்று, தான் எடுத்த சபதத்தை இந்த டிகுவான் அறிமுகத்தின் வாயிலாக ஃபோக்ஸ்வாகன் நிறைவேற்ற இருக்கிறது.

இப்போது விற்பனையில் இருக்கும் டிகுவான் ஆல் ஸ்பேஸுக்கும், புதிதாக அறிமுகமாக இருக்கும் 5 சீட்டர் டிகுவானுக்கும் என்ன ஒற்றுமை... என்ன வேற்றுமை?

Volkswagen Tiguan


ஒரே வரியில் சொன்னால், இது ஒரு ஃபேஸ்லிஃப்ட்தான். கிரில், பம்பர் டிசைன் மற்றும் LED ஹெட்லைட்ஸ் ஆகியவற்றின் டிசைன்களை மாற்றியிருக்கிறார்கள். திருப்பங்களில் வாகனத்தைச் செலுத்தும்போது, சாலையில் வெளிச்சம் விழும் வகையில் இதன் ஹெட்லைட்ஸ் திரும்பும் என்பது புதுமை. ஃபோக்ஸ்வாகனின் புதிய லோகோவை இதன் முகப்பில் வைத்திருக்கிறார்கள். இது 5 சீட்டர் என்பதால், இதன் பின்புறத்தையும் அதற்கு ஏற்ப மாற்றம் செய்திருக்கிறார்கள். 18 இன்ச் அலாய்வீலும், அதற்கு மேலே இருக்கும் வீல் ஆர்ச்சும் கம்பீரத்தைக் கூட்டுகின்றன. டெயில் லைட்டும் மாறியிருக்கிறது. பின் பக்கம் ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார் இருப்பதன் அடையாளத்தைப் பார்க்க முடிகிறது. லைட்டான நீள நிறம்தான் இதன் சிக்னேச்சர் கலராக இருக்கும்.

உள்ளலங்காரம்: இது எப்படி இருக்கும் என்பதை, மேலும் சில காலத்துக்கு சஸ்பென்ஸாக வைத்திருக்க ஃபோக்ஸ்வாகன் முடிவெடுத்திருக்கிறது. என்றாலும், அதைப் பற்றி ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது அது. பனோரமிக் சன்ரூஃப், 3 ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவற்றோடு, புதிய டிஜிட்டல் க்ளஸ்ட்டர் ஆகியவை ஆச்சரியமூட்டக் கூடியதாக இருக்கும். பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போல, இதிலும் சில நகாசு வேலைகளை ஃபோக்ஸ்வாகனிடமிருந்து நிச்சயம் எதிர்பாக்கலாம்.

இன்ஜின்: இதை இயக்கப் போவது 190 bhp சக்தி மற்றும் 32 kgm டார்க்கையும் கொடுக்கக்கூடிய 2.0 லிட்டர் TSI இன்ஜின். இது ஃப்ரன்ட் வீல் டிரைவ் வாகனமாக மட்டும்தான் இருக்கும். இதன் கையாளுமை, சஸ்பென்ஷன் போன்ற விஷயங்களைப் பொருத்துத்தான் இதன் எதிர்காலத்தை வாடிக்கையாளர்கள் முடிவு செய்வார்கள். ஆனாலும், வாடிக்கையாளர்களை இந்த முறை ஃபோக்ஸ்வாகன் அப்படியே விடப் போவதில்லை.

ஸ்ட்ரேட்டஜி: இந்தியா 2.0 திட்டத்தின்படி ஃபோக்ஸ்வாகன் பல புதிய முயற்சிகளை எடுத்திருப்பதாகச் சொல்கிறது. சர்வீஸ், உதிரிபாகங்களுக்கு ஆகும் செலவு எனத் துவங்கி, சர்வீஸ் விஷயத்தில் ஃபோக்ஸ்வாகன் வாடிக்கையாளர்கள் முழுமையாகத் திருப்திப்படுத்தவில்லை என்பதை அது நன்கு உணர்ந்து இருக்கிறது. அப்படி ஒரு கசப்பான அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு நேர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், அது சர்வீஸ் சென்டர்களில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறது. ஃபோக்ஸ்வாகன் ஷோரூமின் முகப்பில் துவங்கி உள்ளலங்காரம் வரை அனைத்தையும் மாற்ற அது முயற்சி எடுத்து வருகிறது.

இன்ஜின் ஆயில் விலை துவங்கி காரின் காஸ்ட் ஆஃப் ஓனர்ஷிப் வரை பலவற்றையும் குறைக்க முயற்சிகளை எடுத்திருப்பதாக ஃபோக்ஸ்வாகன் அதிகாரிகள் உறுதி கூறுகிறார்கள். 4EVER Cover என்ற பெயரில் நான்கு ஆண்டுக்கு வாரன்ட்டி மற்றும் ரோடு சைடு அசிஸ்டென்ஸ் ஆகியவைகூட இதில் அடக்கம்.

தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும், `இந்தியா 2.0’ என்ற அதன் திட்டம் வெற்றி பெறவும்... ஃபோக்ஸ்வாகன் நிச்சயம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். இதன் டெஸ்ட் டிரைவ் நடைபெறும்போது, விடை தெரியாமல் நாம் விட்டுச் செல்லும் கேள்விகளுக்கு விடை தேடுவோம்.திரும்பவும் வருது டிகுவான் 5 சீட்டர்!



source https://www.vikatan.com/automobile/car/volkswagen-tiguan-5-seater-is-coming-back

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக