தபால் நிலையத் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசு குறைத்திருப்பதால் தற்சமயம் பெரும்பாலான சேமிப்பு திட்டங்களுக்கு குறைவான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் சுற்றறிக்கை நேற்று இரவு வழங்கிய நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அந்த முடிவை நிதியமைச்சகம் திரும்பப்பெறுவாத அறிவித்துள்ளது. இத்தகவலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று காலாண்டுகளில் சிறிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்றாமல் நிலையாக செயல்படுத்திய அரசாங்கம், தற்சமயம் அதாவது மார்ச் 31, 2021 தேதியிட்ட நிதி அமைச்சக சுற்றறிக்கையின்படி, சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2021 -2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் 50 -110 அடிப்படை புள்ளிகள் (100 அடிப்படை புள்ளிகள் / பிபிஎஸ் = 1%) இடையே பெருமளவில் குறைக்கப்பட்டும் என்று நேற்று அறிவித்திருந்தது.
அதிலும் மிக முக்கியமாக பிபிஎஃப் சேமிப்பின் வட்டி விகிதம் 7% க்கும் குறைவானது. இது 1974 ஆண்டிற்க்குப் பிறகு முதல் முறையாக அதாவது கடந்த 46 ஆண்டுகளின் வட்டி விகிதத்தை விட மிகவும் குறைக்கப்பட்ட நிலையில், அதற்கு பொதுமக்கள் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏப்ரல் 1, 2021 முதல், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) - முந்தைய 7.1 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதம் குறைவாகவும் , தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி) - 6.8 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதம் குறைவாகவும், சுகன்யா சமிர்தி யோஜனா (எஸ்.எஸ்.ஒய்) - 6.9 சதவீதம், முந்தைய 7.6 சதவீதத்திலிருந்து குறைந்ததுள்ளது்.தபால் அலுவலக நேர வைப்பு விகிதங்கள் 0.40 ஆக 1.1% ஆகக் குறைக்கப்பட்டு 4.4- 5.3% வரம்பில் வட்டி விகிதங்கள் வழங்கப்படும் என்றும் நேற்றைய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2020-21 ஏப்ரல்-ஜூன் காலாண்டில், சிறிய சேமிப்பு திட்டங்களின் விகிதங்களை அரசாங்கம் 70-140 பிபிஎஸ் குறைத்தது. (100 பிபிஎஸ் = 1 சதவீதம்).
சமீபத்திய நடவடிக்கை மூலமாக, நடப்பு நிதியாண்டில் சிறிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மொத்தம் 120-250 பிபிஎஸ் குறைக்கப்பட்டுள்ளன.
2020-21 நிதியாண்டின் நான்காம் காலாண்டிற்கான பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைப் கிழே தரப்பட்டுள்ளது.
10 ஆண்டு அரசு பத்திரங்கள் (ஜி-செக்) யில்டு வீழ்ச்சியடைந்ததால் காலாண்டில் இந்த விகிதங்கள் குறைக்கப்படுவதாக நேற்று தெரிவித்தனர். இதேபோன்ற முதிர்ச்சியடைந்த அரசாங்க பத்திரங்களின் விளைச்சலை விட வெவ்வேறு சிறிய சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் 25-100 பிபிஎஸ் அதிகமாக இருக்க வேண்டும் என்று ஷியாமலா கோபிநாத் குழு பரிந்துரைத்திருந்தது.
ரிசர்வ் வங்கி விகிதங்களில் தனது நிலையை படிப்படியாக குறைப்பதால், வங்கிகளும் எஃப்.டி வட்டி வீதக் குறைப்புகளில் கவனம் செல்லுத்த தொடங்கியுள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) செப்டம்பர் 2020 முதல் அதன் ஒரு வருட எஃப்.டி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கிறது.
தற்போது, வங்கியின் ஒரு வருட எஃப்.டி வட்டி விகிதம் 4.90% ஆகும். கனரா வங்கி போன்ற சில வங்கிகள், இரண்டு வருடங்களுக்கும் மேலான நீண்ட கால எஃப்.டி.களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
இவ்வாறான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இதற்கு பொதுமக்களிடம் இருந்தும் எதிர்கட்சியினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது . இந்நிலையில், இந்த முடிவைத் திரும்பப் பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நிதி அமைச்சகத்தின் இந்த பின்வாங்கலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி, " இந்த திடீர் முடிவிற்கு காரணம் அதீத எண்ணம் கொண்ட பார்வையா அல்லது தேர்தலை எண்ணி மாற்றப்பட்ட முடிவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த முடிவிற்கு கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், " மத்திய அரசின் இந்த வட்டி குறைப்பு முடிவு நடுத்தர நரகத்தின் மீது தொடுக்கப்பட்ட போர். தவறு செய்தால் அதை சொற்ப காரங்கள் கூறித் தட்டிக்கழிக்கக் கூடாது " என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
source https://www.vikatan.com/business/finance/govt-withdraws-order-of-interest-rate-cut-on-pf-and-small-savings-schemes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக