கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். பா.ஜ.க தரப்பில் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
வானதியை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று கோவை தெற்கு தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுடன், மக்களுடைய பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், ஆட்சி நிர்வாகம், திட்டங்கள் தொடர்பாக விவாதம் செய்யத் தயாரா என கமல்ஹாசனுக்கு நான் சவால் விடுகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
ம.நீ.ம கொள்கைப்பரப்பு பொதுச் செயலாளர் C.K.குமாரவேல் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில்,`` எங்கள் தலைவரை வானதி சீனிவாசனுடன் விவாதிக்க அழைக்கிறார் பா.ஜ.க மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. முதலில் மோடி மற்றும் அமைச்சர்களுடன் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும். பிறகு வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் விவாதிக்கலாம். இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட வானதி சீனிவாசனுடன் விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும்” என்று காட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/kamal-hassan-vanathi-srinivasan-debate-reply-to-smriti-irani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக