Ad

புதன், 31 மார்ச், 2021

கோவை: பாஜக-வினர் கல்வீச்சு நடத்திய கடையில் செருப்பு வாங்கி ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்!

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரத்துக்காக கோவை வந்திருந்தார். புலியகுளம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கி பொதுக்கூட்டம் நடைபெற்ற ராஜவீதி தேர்முட்டி பகுதிக்கு செல்வதுதான் பா.ஜ.க-வினரின் திட்டம். ஆனால், அந்தப் பேரணிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து விதிமுறைகளை மீறி நடந்த அந்தப் பேரணியின் போது வெறுக்கத்தக்க கோஷங்களை எழுப்பியதாகவும், அங்கிருந்து கடைகளை மூட சொல்லி தகராறு செய்து கல்வீச்சில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பேரணி

Also Read: பைக் பேரணி, வெறுக்கத்தக்க கோஷம், கல்வீச்சு - யோகி ஆதித்யநாத் கோவை வருகை ரிப்போர்ட்!

இதுகுறித்து, வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாம்தமிழர் கட்சி மற்றும் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர்.

கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று வணிகர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அதேபோல, மக்கள் நீதி மய்யம் தலைவரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஆதித்யநாத் வருகையின்போது பா.ஜ.க செய்த அடாவடிகள் கண்டனத்திற்குரியவை.

கமல்ஹாசன்

கோவையில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து மக்களை நேசிக்கக் கூடிய ஒரு தலைமை உருவாக வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்துவது இதற்காகத்தான். ‘கலவர ஸ்பெஷலிஸ்டுகளை’ ஒற்றுமையால் முறியடிப்போம்“ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, கல்வீச்சு சம்பவம் நடந்த வி.எம் காலணியகம் செருப்புக் கடைக்கு கமல் நேரில் சென்றார். திடீரென்று அந்தக் கடைக்குள் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் கமல் என்ட்ரி கொடுத்ததால், அங்கு சற்று கூட்டம் கூடியது. கமல் அங்கு செருப்பு வாங்கிவிட்டு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

கமல்

அப்போது பேசிய கமல் ``இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள்” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kamalhaasan-vists-shop-where-bjp-cadres-thrown-stones-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக